»   »  அந்தக்கால நடிகர் நடிகைகளின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - 80'ஸ் கெட் டுகெதர்!

அந்தக்கால நடிகர் நடிகைகளின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - 80'ஸ் கெட் டுகெதர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அந்தக்கால நடிகர் நடிகைகளின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - 80'ஸ் கெட் டுகெதர்!- வீடியோ

சென்னை : 80-களில் கொடிகட்டிப் பறந்த தென்னிந்தியத் திரையுலகப் பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர்.

இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள இன்டர்கான்டினென்ட்டல் ரெசார்ட்டில் நடைபெற்ற இந்த கெட்-டுகெதர் நிகழ்வுக்கு அனைவரும் ஊதா நிற உடையனிந்து கடந்த 17-ம் தேதி காலை அனைவரும் சங்கமமானார்கள்.

கெட்-டுகெதர் நடைபெற்ற அந்த இடம் முழுவதும் ஊதா நிறப் பூக்கள் உள்ளிட்ட கலைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இவர்களது கொண்டாட்டங்கள் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

பிரபலங்கள் வருகை

பிரபலங்கள் வருகை

ரெசார்ட்டில் இருக்கும் கூடத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும், நடிகை சுஹாசினி மற்றும் நடிகை லிசி ஆகியோர் நடிகர் ராஜ்குமார் சேதுபதி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குஷ்பு துணையுடன் உபசரித்தனர். மும்பை, கேரளா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரபலங்களும் ஒவ்வொருவராக வந்த வண்ணம் இருந்தனர்.

க்ரூப் போட்டோ

க்ரூப் போட்டோ

அதன் பின்னர் எடுக்கப்பட்ட க்ரூப் போட்டோவில் இந்திய திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் ஊதா வண்ண உடையுடன் கலந்து கொண்டனர். இந்தக் கேளிக்கையில் ஓர் அங்கமாக 60 மற்றும் 70-களில் வெளிவந்து பிரபலமான இந்தி மெல்லிசைப் பாடல்களை நடிகர்கள் ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் பாடி மகிழ்ந்துள்ளனர். இதில் ரேவதி மற்றும் குஷ்புவுக்கு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

ராம்ப் வாக்

ராம்ப் வாக்

நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கான ராம்ப் வாக் போட்டிகளும் நடைபெற்று அதில் சிரஞ்சீவி தலைமையிலான நடிகர்கள் அணி வெற்றி பெற்றது. பாடகர் ஸ்ரீராம் பூணம், ஜாக்கி ஷெராப், பாக்யராஜ், வெங்கடேஷ், சுரேஷ் ஆகியோரின் படங்களில் இடம்பெற்ற பாடல்களைப் பாடினார். பின்பு அந்தப் பாடலின் நிகழ்வுகளை பிரபலங்கள் நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர்.

ஆன்மீகம் தத்துவம்

ஆன்மீகம் தத்துவம்

பின்னர் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த இந்தச் சந்திப்பில் ஆன்மீகம் மற்றும் தத்துவம் உள்ளிட்ட சில தலைப்புகளை வைத்து நடிகர் நடிகைகள் விவாதித்தனர். இந்தச் சந்திப்பிற்கு பின்னர் அதில் கலந்து கொண்ட 28 பிரபலங்களும் 19-ம் தேதி பிரியாவிடை பெற்று தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

English summary
80's leading actors of South Indian cinema celebrating get together each year on a particular day. In the same way, the 8th year of this meet has been celebrated in Mahabalipuram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil