»   »  இங்க இம்புட்டு ரணகளம் நடக்கும்போது குஷ்பு எங்கே உள்ளார் தெரியுமா?

இங்க இம்புட்டு ரணகளம் நடக்கும்போது குஷ்பு எங்கே உள்ளார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: 80களில் திரையுலகை ஆண்ட நடிகர், நடிகைகளின் வருடாந்திர சந்திப்பு சீனாவில் நடைபெற்றது.

1980களில் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்தவர்கள் ஆண்டுதோறும் எங்காவது சந்தித்து பழைய நினைவுகளை அசைபோட்டு மகிழ்வார்கள்.

அப்படியே புகைப்படங்கள் எடுத்துக் கொள்வார்கள்.

சீனா

சீனா

இந்த ஆண்டுக்கான சந்திப்பு சீனாவில் நடைபெறும் என்று கூறப்பட்டது. அதன்படி நடிகர், நடிகைகள் சீனாவில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

ராதிகா

ராதிகா

நடிகர் சிரஞ்சீவி, அவரது மனைவி, நடிகர் பாக்யராஜ், அவரின் மனைவி பூர்ணிமா, நடிகர் ராஜ்குமார், நடிகைகள் லிசி, சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார்,குஷ்பு, சுஜாதா உள்ளிட்டோர் சீனா சென்றுள்ளனர்.

ட்வீட்

சீனாவில் எடுத்த புகைப்படங்களை நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். நண்பர்களுடன் சீனா சென்றது மறக்கமுடியாத ஒன்று என ட்வீட்டியுள்ளார் ராதிகா.

குஷ்பு

சீனாவில் நண்பர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சுஹாசினி

சுஹாசினி

இப்படி வருடாந்திர சந்திப்பு நடத்தும் ஐடியா கொடுத்தது நடிகைகள் லிசியும், சுஹாசினியும். 80கள் கிளப்பில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், குஷ்பு, ராதிகா, ரேவதி என 32 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
80s actors have met in China as part of the annual get together. The annual meet idea was put forth by actresses Lissy and Suhasini Maniratnam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil