»   »  ரஜினி, கமல் ஆக மாறப்போகும் சிம்பு… : 1980களின் நட்சத்திர சந்திப்பு

ரஜினி, கமல் ஆக மாறப்போகும் சிம்பு… : 1980களின் நட்சத்திர சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1980களில் திரை உலகில் கோலோச்சிய ஹீரோ - ஹீரோயின்கள் ஆண்டுதோறும் சந்தித்து தங்களது நட்பை புதுப்பித்து கொள்வது வாடிக்கை.

2009ஆம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்று தங்களின் இளமை கால நினைவுகளை அசைபோடுகின்றனர்

அப்போது, புகைப்படக்காரர்கள், வீடியோ உள்ளிட்ட யாருமே உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நடிகர் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வார்.

கடந்த ஆண்டிற்கான சந்திப்பு பொறுப்புகளை சந்திப்பை மலையாள நடிகர் மோகன்லால் ஏற்றுக் கொண்டார். சந்திப்பிற்கான உடை அலங்கார தீம் கடற்கரை உடை என்று தீர்மானித்து, ரஜினி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் அணிந்து வந்திருந்தார்கள்.

அதே போல, இந்த ஆண்டுக்கான சந்திப்பை நடிகை ராதிகா ஏற்றுக் கொண்டிருக்கிறார். இம்முறை பெரிய விழா போன்று கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கடந்த டிசம்பர் 24ஆம் தேதி லீலா பேலஸ் ஹோட்டலில் இச்சந்திப்பு நடைபெற இருந்தது. ஆனால் திரைப்பட இயக்குநர் பாலச்சந்தர் மரணமடைந்த காரணத்தால் இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

பாலசந்தருக்கு அஞ்சலி

பாலசந்தருக்கு அஞ்சலி

இந்த ஆண்டு பாலுமகேந்திரா,பாலசந்தருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இயக்குநர்களுக்கு கவுரவம்

இயக்குநர்களுக்கு கவுரவம்

1980களில் பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் மற்றும் டி.ராஜேந்தர்,கே.பாக்யராஜ் ஆகியோரை கவுரவப்படுத்த இருக்கிறார்கள். தனது குரு பாரதிராஜா கவுரவப்படுத்தும்போது, நானும் வாங்கினால் சரியாக இருக்காது, வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

நட்சத்திரங்களின் நடனம்

நட்சத்திரங்களின் நடனம்

இம்முறை நடைபெறும் விழாவில், தற்போதுள்ள நடிகைகள் அந்தக் கால பாடல்களுக்கு நடனமாடும் கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

80களின் நட்சத்திரங்கள்

80களின் நட்சத்திரங்கள்

ராதிகாவின் மகளும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான ரேயான், இசை, நடனம், நாடகம் என்று இந்த ஆண்டு நட்சத்திர சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பான முறையில் கொண்டாடப்பட உள்ளதாக கூறினார்.

இந்த கால நட்சத்திரங்கள்

இந்த கால நட்சத்திரங்கள்

சிம்பு, வரலட்சுமி சரத்குமார்,வேதிகா, மகத், வைபவ், நீது சந்திரா போன்ற நட்சத்திரங்கள் நடனமாடி மகிழ்விக்க இருக்கின்றனர்.

சிம்புவின் நடனம்

சிம்புவின் நடனம்

ரஜினி, கமல் பட பாடல்களுக்கு சிம்பு நடனமாட இருக்கிறார்.

சில்க், ஸ்ரீ பிரியா

சில்க், ஸ்ரீ பிரியா

கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவின் பாடல்களுக்கு பிந்து மாதவியும், ஸ்ரீபிரியாவின் பாடல்களுக்கு நீது சந்திராவும் நடனமாட உள்ளதாக ரேயான் தெரிவித்தார்.

மனோபாலா-கோவை சரளா

மனோபாலா-கோவை சரளா

இந்த நிகழ்ச்சியில் கோவை சரளா, மனோபாலா பங்கேற்கும் நகைச்சுவை நாடகமும் அரங்கேறுகிறது. இந்நிகழ்ச்சியினை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பெரும் போட்டிக்கு இடையே வாங்கி ஒளிபரப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
From celebrating their era of music, dance and drama, to having a gala time getting together at one place — the stars of 80s really know how to have fun. This time, these stars are all set to sit back and relax enjoying the tribute performances by today's stars. The private event, dubbed Evergreen 80s, will see all the top actors, actresses, producers and directors from all the four south industries attending.
Please Wait while comments are loading...