புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பான 83 பட டிரைலர்...ஆச்சரியத்தில் ரசிகர்கள்
மும்பை : இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியன் மூவியாக இருப்பது 83 படம். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் 3டி.,யில் டிசம்பர் 24 ம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே 1983 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது, அப்போது இந்திய அணி இருந்த சூழல் ஆகியவற்றை சொல்வதாக இந்த படம் அமைக்கப்பட்டுள்ளது.

டிரைலர் வெளியிட்ட கமல்
இந்த படத்தில் கபில்தேவ் ரோலில் ரன்வீர் சிங்கும், அவரது மனைவி ரோமி தேவி ரோலில் தீபிகா படுகோனும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் இந்த டிரைலரை கமலஹாசன் மருத்துவமனையில் இருந்தபடியே வெளியிட்டார்.

புர்ஜ் கலிஃபாவில் 83 டிரைலர்
83 படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட ப்ரொமோஷனுக்காக ரன்வீரும், தீபிகாவும் துபாய் சென்றுள்ளனர். துபாயில் உள்ள புகழ்பெற்றதும், உலகில் மிக உயரமான கட்டிடமுமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் 83 படத்தின் டிரைலர் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வைரலாகும் வீடியோ
டைரக்டர் கபிர் கான், கபில் தேவ், கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ரன்வீர் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் இதை கண்டு ரசித்தனர். ஏராளமானோர் கூடி நின்று புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மீது 83 டிரைலர் ஒளிபரப்பானதை தங்களின் மொபைல் போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோவை ரன்வீர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது செம வைரலாகி வருகிறது.

குவியும் கெளரவம்
படம் தியேட்டரில் ரிலீசாவதற்கு முன்பே சமீபத்தில் நடந்து முடிந்த Red Sea International Film Festival ல் திரையிடப்பட்டு, பாராட்டை பெற்றது. தற்போது உலகின் மிகச் சிறந்த கெளரவமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மீது 83 டிரைலர் ஒளிபரப்பாகி உள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது படக்குழுவிற்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவமாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











