»   »  இனிமேல் தியேட்டரில் படுத்துக் கொண்டே படம் பார்க்கலாம்.. இங்கல்ல கோயமுத்தூரில்!

இனிமேல் தியேட்டரில் படுத்துக் கொண்டே படம் பார்க்கலாம்.. இங்கல்ல கோயமுத்தூரில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோயமுத்தூர்: திரையரங்குகளில் படுத்துக் கொண்டே சாவகாசமாக படம் பார்க்கும் வகையில் மல்டிபிள் திரையரங்கு ஒன்று கோயமுத்தூரில் உருவாகி வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் கோயமுத்தூரில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புரோசான் மால் கட்டப்பட்டு வருகிறது. இந்த மாலில் 9 திரையரங்குகளை அமைக்க ஐநாக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

மேலும் இந்த மாலில் அமையவிருக்கும் 9 திரையரங்குகளிலும் ரசிகர்கள் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வகையில், மெத்தை போன்ற தலையணைகளுடன் கூடிய இருக்கைகளையும் ஐநாக்ஸ் அமைக்கிறது.

9 Inox Multiplex Screens in Coimbatore

ஆனால் தனித்தனியாக இல்லாமல் ஜோடியாக சேர்ந்து அமரும் வகையில் இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோயமுத்தூரில் உள்ள சத்தி ரோட்டில் இந்த மால் தற்போது கட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ப்ரூக்பீல்ட்ஸ் மற்றும் ஃபன் ரீபப்ளிக் மால் போன்ற 2 மால்கள் இங்கே இருக்கின்றன. ஆனால் இவை இரண்டையும் மிஞ்சும் வகையில் புரோசான் மால் அமைக்கப்பட்டு வருகிறது.

9 Inox Multiplex Screens in Coimbatore

இந்த மாலின் கட்டுமானப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய தியேட்டர் காம்ப்ளக்ஸ் என்ற பெருமையை புரோசான் மால் பெறும்.

இங்கு ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: coimbatore, multiplex, screen, திரை
English summary
Prozone Mall in Coimbatore district is Constructed with various Facilities. Inox company has Decided to set up 9 Multiplex Screens in the Mall.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil