»   »  செப் 8-ம் தேதி 9 படங்கள் வருது!

செப் 8-ம் தேதி 9 படங்கள் வருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிக்கு முன் இருக்கிற ஸ்டாக்கை எல்லாம் வித்துத் தீர்த்துவிட வேண்டும் என்ற வேகம் கடைக்காரர்களிடம் இருக்கும். அதுபோன்ற ஒரு வேகம் இப்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களிடமும்.

வருகிற 8-ம் தேதி மட்டும் 9 படங்களை களமிறக்குகிறார்கள். இதில் சின்ன படம் நடுத்தர படம், ஏ ஆர் ரஹ்மானின் மெகா படம் எல்லாமே அடங்கும்.

9 movies scheduled to Sep 8th

விக்ரம் பிரபு நடித்த நெருப்புடா, விஷ்ணு நடித்த கதாநாயகன், மாயமோகினி, தப்புத்தண்டா, ஆறாம் வேற்றுமை, ஏ ஆர் ரஹ்மானின் ஒன் ஹார்ட், காதல் கசக்குதய்யா, கில்லி பம்பரம் கோலி, ஹாலிவுட் படம் ஐடி (IT) ஆகிய ஒன்பது படங்கள் வெளியாகின்றன.

வரும் செப்டம்பர் 28-ம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினம். சிவகார்த்திகேயன் படம் அன்று வெளியாக உள்ளதால், அதற்கு முன்பாக இருக்கிற படங்களை வெளியிட்டு வந்த வரை வசூல் பார்க்க முடிவு செய்து, இப்படி 9 படங்களை வெளியிடுகின்றனர்.

English summary
On September 8th, there are 9 new Tamil and Hollywood movies will hit the screens

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil