»   »  ஜூன் 9 முதல் ப்ளாஸோ... 9 திரைகள் கொண்ட ராஜ அரங்குகள்... தமிழகத்தின் முதல் ஐமேக்ஸ்!

ஜூன் 9 முதல் ப்ளாஸோ... 9 திரைகள் கொண்ட ராஜ அரங்குகள்... தமிழகத்தின் முதல் ஐமேக்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரும் ஜூன் 9-ம் தேதி முதல் சென்னையில் மேலும் 9 புதிய திரையரங்குகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன. இந்த 9 அரங்குகளில் ஒரு ஐமேக்ஸும் உண்டு.

சென்னை வட பழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் இந்த 9 அரங்குகளும் அமைந்துள்ளன.

இவை அனைத்தும் பழங்கால மன்னர்களின் அரண்மனை மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன. மிக நவீன திரைகள், ஒலி அம்சம், ஒளிப்படக் கருவிகளை இதில் பொருத்தியிருக்கிறார்கள்.

9 screen cinema mall Plazoo from June 9th

இந்த அரங்குகள் கட்டுமானப் பணி அனைத்தும் முடிந்துவிட்டாலும், அரசுத் தரப்பில் அனுமதி தரப்படாமல் இருந்தது.

இப்போது அனுமதி கிடைத்துவிட்டதால், வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 9-ம் தேதி இந்த அரங்குகள் திறக்கப்படுகின்றன. சத்யம் சினிமாஸ் நிறுவனம்தான் இந்த அரங்குகளின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாங்குமா?

பொதுவாகவே வட பழனி மிகவும் நெரிசலான பகுதி. நாள் முழுக்க வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை. கமலா, ஏவிஎம் ராஜேஸ்வரி, ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகள் இந்த சாலையில் உள்ளன. இப்போது 9 அரங்குகள் கொண்ட இந்த ப்ளாஸோ திறக்கப்பட்டால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ப்ளாஸோ தவிர மேலும் 2 மல்டிப்ளெக்ஸ்கள் வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகளில் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The 9 screen cinema mall Plazoo owned by Sathyam will be opened on June 9th at Vadapazhani.
Please Wait while comments are loading...