Don't Miss!
- News
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
- Finance
Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
93 வது ஆஸ்கார் விருதுகள்...நாளை அதிகாலை அறிவிப்பு
டெல்லி : திரைப்பட துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. இந்த விருதுகள் வழக்கமாக பிப்ரவரி மாதத்திலேயே வழங்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காலமாக இந்த ஆண்டு 2 மாதங்கள் தாமதமாக நடைபெற உள்ளது.
வித்தியாசமான உடையில்… உதட்டை குவித்து ஹாட் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன் !
ரெட் கார்பெட் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு) நடைபெற உள்ளது. கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு, இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து விருந்தினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

எப்போது விழா துவங்கும்
93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25 ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி ஏப்ரல் 26 ம் தேதி காலை 5.30 மணிக்கு துவங்கி 8.30 மணி வரை இவ்விழா நடைபெற உள்ளது. 30 பிரிவுகளின் கீழ் இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்
இந்த ஆண்டு ஆஸ்கார் விருதிற்காக The Father, Judas and the Black Messiah, Mank, Minari, Nomadland, Promising Young Woman, Sound of Metal, The Trial of the Chicago 7 ஆகிய படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சிறந்த நடிகர், நடிகைகள் பரிந்துரை
சிறந்த நடிகர் பிரிவில் ரிஸ் அகமது, ஸ்டீவன் யான், கேரி ஓல்ட்மேன், மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன், சர் ஆன்டனி ஹோப்கின்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த நடிகைக்கான விருதிற்காக வியோலா டேவிஸ், பிரான்சிஸ் மெக்டார்மென்ட், வெனிசா, கேரி முல்லிகன், ஆன்ட்ரா டே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.The Father,Sound of Metal, Nomadland ஆகிய படங்களே அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எப்படி பார்க்கலாம்
ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஸ்டார் டிவி, ஸ்டார் வேர்ல்ட் ஆகிய சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இது தவிர ஆஸ்கார் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆஸ்கார் சமூக வலைதளங்கள் ஆகியவற்றிலும் இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.