»   »  எஸ்பிபியின் ஒப்பாரி அயோக்கியத்தனத்தின் உச்சம்! - #ISupportIlaiyaraaja

எஸ்பிபியின் ஒப்பாரி அயோக்கியத்தனத்தின் உச்சம்! - #ISupportIlaiyaraaja

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதலில் 'ஐ சப்போர்ட் இளையராஜா'...

இளையராஜா எஸ்.பி.பி அனுப்பிய நோட்டீஸ் பார்த்து எஸ்.பி.பி ஷாக் ஆகிவிட்டாராம். என்னய்யா கொடுமை இது. நல்ல கதை. அவர் எங்கய்யா பாடக் கூடாது என்றார். அவர் அனுமதியின்றி பாடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். அதில் என்ன தவறு. இதில் ஷாக் ஆக என்ன வெளக்கெண்ணெயை இருக்கிறது. பின்வருவது இளையராஜாவின் வக்கீல் எஸ்.பி.பிக்கு அனுப்பிய நோட்டீஸ்.

A blasting article against SP Bala

"இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்".

இதில் என்ன தவறு இருக்கிறது. அனுமதி வாங்காமல் பாடுவது என்பது மொள்ளமாரித்தனம். எஸ்.பி.பி அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு கச்சேரி ஏற்பாடு செயப்பட்டுள்ளது. அதில் புழங்கும் காசு எவ்வளவு என்று உங்களுக்குச் சொல்லத் தேவையே இல்லை.

எஸ்.பி.பி தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்:

"இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். 'எஸ்.பி.பி.50' என்ற பெயரில் கடந்தவருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷ்யா, ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸும் வரவில்லை. ஆனால் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்த கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். இனிவரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்".

A blasting article against SP Bala

இத்தனை நாடுகளில் பாடிக்கொண்டு ஜாலியாக ஊரைச் சுற்றிக்கொண்டு காசு பார்க்கும் எஸ்.பி.பி, இளையராஜாவின் அனுதியின்றி பாடக்கூடாது என்று அவர் நியாயமாய் வைத்த கோரிக்கைக்கு எஸ்.பி.பி 'வக்காளி இனிமே நீ பாடவே கூடாது...' என்று ராஜா சொன்னது போல் இப்படி ஒரு ஒப்பாரி வைப்பது அயோக்கியத்தனத்தின் உச்சம்.

வசூல் ஆகும் காசில் ஒரு சதவிகிதத்தை இளையராஜா கேட்கடாமலேயே அவரிடம் போய்க் கொடுத்தால் அவர் ஏன் நோட்டீஸ் அனுப்பப் போகிறார். இன்றைய தேதிக்கு உலகமெங்கும் தனது மத்திம வயதில் இருக்கும் இளைஞர்கள் பூராவும் ராஜா என்றால் உயிரையே விடத் தயாராய் இருப்பவர்கள். எங்கோ யாரையோ காதலித்துப் பிரிந்து எங்கோ குழப்பத்தில் வாழ்ந்துகொண்டு, "மாப்ள, இங்க அமெரிக்கால ஆல் டைம் ராஜா ஸார் பாட்டு தாண்டா, தெரியுமா..." என்று மனமுருகச் சொல்லும் நண்பர்களை எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் கச்சேரி என்றால் தலைதெறிக்க முதலில் ஓடிப்போய் காசைக் கொட்டுவார்கள்.

அப்படி இருக்க, எஸ்.பி.பி இப்படி முதலைக் கண்ணீர் வடிப்பது கயவாளித்தனம்.
உடனே சில போராளிகள் இப்படிக் கேட்கலாம். "ஏன், இளையராஜா பாரதியார் பாட்டு போட்டிருக்காரே அதுக்கு என்ன அவர் காப்புரிமை வாங்கினார்..?" என்று. பாரதியார் பாடலுக்கு காப்புரிமை வாங்கவேண்டிய வேலை இளையராஜாவுக்கு இல்லை. காரணம் அது நாட்டுடைமை ஆக்கப்பட்ட பொதுச் சொத்து. நம்மாளுங்க பொது அறிவு இவ்ளோதான்!

வேண்டுமானால் எஸ்.பி.பி ஒன்று செய்யலாம். மீடியாவை அழைத்து சமீபத்தில் அவர் கே.ஜே. யேசுதாஸுக்கு பாத பூஜை செய்து காட்டினாராம். அதே ஸ்டைலில் இளையராஜாவை அழைத்து ஊரறிய, 'அண்ணே, இத்தனை நாள் உங்கள் அனுமதி வாங்காமல் பாடிவிட்டேன். இனி அப்படி செய்யமாட்டேன். மொத அனுமதி குடுங்க அண்ணே....' என்று காலில் விழுந்தால் கூடப் போதுமானது.

தற்போது ஒரு பாடலைக் கூட காசு கொடுத்து வாங்கலாம் என்கிற வசதியோடு நிறைய இணையதளங்கள் இருக்கின்றன. இளையராஜாவின் ரசிகர்கள் எம்பி 3ல் குப்பைத்தனமாகவும் திருட்டுத்தனமாகவும் கேட்காமல், ஆளுக்கு ஒரு பாடலை காசு கொடுத்து வாங்கினால் கூடப் போதும். ராஜா கோடீஸ்வரர் ஆகிவிடுவார்!

-பிரபு காளிதாஸ்

English summary
Prabhu Kalidas's article about Ilaiyaraaja - SPB issue in Social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil