நடிகை ஸ்வர்ணமால்யா வீட்டிற்குள் திடீரென புகுந்த போலீஸ்.. நடந்தது என்ன?
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த ஸ்வர்ணமால்யா, மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, எங்கள் அண்ணா, ஜோதிகா பிருத்விராஜ் நடித்த மொழி படத்தில் நடித்திருந்தார். தற்போது ஸ்வர்ணமால்யா நாட்டிய பள்ளி தொடங்கி பரதநாட்டியம் கற்று கொடுக்கிறார். இந்நிலையில், நடிகை ஸ்வர்ணமால்யா வீட்டில் திடீரெ ஒரு போலீஸ் கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இன்று காலை வந்த மெயிலில், சைதாப்பேட்டை நந்தனத்தில் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாலினி கணேஷ் அதாவது நடிகை ஸ்வர்ணமால்யாவின் அம்மாவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஸ்வர்ணமால்யா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். கடைசியில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. ஆனால், சொர்ணமால்யா குடும்பத்தினர் 3 வருடங்களுக்கு முன்பே, வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு ஆழ்வார்பேட்டை உள்ள செயின்ட் மேரிஸ் சாலையில் வசித்து வருகின்றனர். இந்த மிரட்டலை விடுத்தது மர்ம ஆசாமி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு புரளி: வெள்ளிக்கிழமை காவல்துறையின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மின்னஞ்சலில், த்ரிஷாவின் நீலாங்கரை வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மெயில் வந்ததைத் தொடர்ந்து, போலீசார். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு உதவியுடன் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் தீவிர சோதனையின் நடத்தினர். பின் அது புரளி என தெரியவந்தது. அதே போல, கடந்த சில வாரங்களாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை, நடிகர் சூர்யா, விஜயகாந்த்,தனுஷ், த்ரிஷா, விஜிய் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளுக்கும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வருகிறது. ஆனால், அவை அனைத்தும் போலியானவை என சோதனையில் தெரியவந்தன. பிரபலங்களின் வீடுகளுக்கும் அவர்களின் அலுவலகங்களுக்கும் கொலை மிரட்டல் வருவது வாடிக்கையாக உள்ளது. சைபர் குற்றம் காவல்துறையினர் அந்த அஞ்சல் முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து தீவிர நடவடிக்கையில் நடத்தி வருகின்றனர்


Click it and Unblock the Notifications











