»   »  திருட்டு வீடியோ பாக்கமாட்டேன்! - அம்மாவிடம் இப்படி ஒரு சத்தியம் வாங்கிய சிறுவன்

திருட்டு வீடியோ பாக்கமாட்டேன்! - அம்மாவிடம் இப்படி ஒரு சத்தியம் வாங்கிய சிறுவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
இனிமேல் நான் படம் பார்த்தால் தியேட்டரில் தான் பார்ப்பேன்.. மகனிடம் சத்தியம் செய்த தாய்- வீடியோ

குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக வெளியாகும் படங்களில் நகைச்சுவை படங்களுக்கு இணையாக ஹாரர் படங்களுக்கும் பங்கு உண்டு. அந்த வகையில் இந்த முறை குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான விதமாக இன்று வெளியாகியுள்ள படம் சங்கு சக்கரம்.

மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சங்கு சக்கரம்' படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'சென்னை 2 சிங்கப்பூர்' பட இயக்குநர் அப்பாஸ் அக்பர் கலந்துகொண்டு பேசியபோது, "எங்களது ஆறு வருட உழைப்பை ஒரேநாளில் திருட்டு விசிடிகளும் ஆன்லைன் இணையதளங்கள் சிலவும் களவாடி விடுகின்றன," என கூறி அதற்குமேல் பேசமுடியாமல் கண்ணீர்விட்டபடி அரங்கை விட்டே வெளியேறினார்.

A boy gets promise from his mother to avoid piracy

அவரது கண்ணீரும் அவரது பேச்சும் விழாவில் கலந்துகொண்ட, 'சங்கு சக்கரம்' படத்தில் நடித்துள்ள ஒரு சிறுவனின் மனதை ரொம்பவே பாதித்து விட்டது. அன்றைய தினம் இரவு மௌனமாக வீட்டில் இருந்த அவனிடம் அவனது தாயார், வழக்கம்போல உனக்கு யாரைப் பிடிக்கும் எனக் கேட்க, எப்போதும் அம்மாவை பிடிக்கும் என சொல்லும் அந்த சிறுவன், படீரென 'உங்களை எனக்கு பிடிக்கவில்லை' என கூறியதை கேட்டு அதிர்ந்துபோனாராம் அந்த தாய்.

அவனிடம் அன்பாக காரணத்தை கேட்க, சங்கு சக்கரம் விழாவில் அப்பாஸ் அக்பர் கண்ணீருடன் பேசியதைக் குறிப்பிட்ட சிறுவன், "நீங்கள், மற்றும் உங்களை போன்றவர்கள் புதிய படங்களை கம்ப்யூட்டரில் பார்க்கிறீர்கள்.. அதனால்தான் அந்த அங்கிள் போன்றவர்கள் எடுக்கும் படத்திற்கு கூட்டமும் வராமல், பணமும் கிடைக்காமல் போகிறது. நீங்கள் இப்படி இனிமேல் கம்ப்யூட்டரில் படம் பார்க்கமாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து தந்தால் தான் நான் உங்களுடன் பேசுவேன்.. அதுவரை பேசமாட்டேன்," என பிடிவாதமாக கூறிவிட்டானாம்.

மகனின் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்த அந்த தாய், உடனே 'இனிமேல் தியேட்டரில்தான் புதிய படங்களை பார்ப்பேன்.. விசிடியில் பார்க்கமாட்டேன்' என மகனுக்கு சத்தியம் செய்துகொடுத்தாராம்.

ஜஸ்ட் விளம்பரத்துக்காக இவ்வளவு சென்சேஷனலாகச் சொல்லியிருக்க மாட்டார்கள் என நம்புவோம்!

English summary
A boy has got a promise from his mother for not viewing movies online.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X