twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரவின் நிழல் படத்துக்கு இப்படியொரு சோதனை வந்துடுச்சே.. பார்த்திபன் மற்றும் அவரது மகள் மீது வழக்கு

    |

    சென்னை: இரவின் நிழல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் பதிலளிக்க சென்னை வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Recommended Video

    அவர் காலை தொட்டு கும்மிடனும் இரவின் நிழல் இசை வெளியீட்டு விழா |Iravin Nizhal *Kollywood

    பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவுக்கு கூட வர முடியாத நிலையில், நடிகர் பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்கான புரமோஷன் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்.

    ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தைத் போலவே இந்த படத்தையும் மக்கள் விருது படம் என்கிற ரீதியில் ஒதுக்கி விடுவார்களோ என்கிற அச்சம் இருப்பதால், பல யூடியூப் சேனல்களுக்கும் அவர் பேட்டி அளித்து வருகிறார்.

    “நன்றி சின்னவரே“.. உதயநிதியை சூசகமாக பாராட்டிய பார்த்திபன்!“நன்றி சின்னவரே“.. உதயநிதியை சூசகமாக பாராட்டிய பார்த்திபன்!

    மதிப்பது இல்லை

    மதிப்பது இல்லை

    வெளியாகும் முன்பே இரவின் நிழல் பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படங்களை வெளிநாட்டு ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு நம்ம ஊரில் மதிப்பதே இல்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் கோல்டன் குளோப், ஆஸ்கர் உள்ளிட்ட போட்டிகளுக்கு சென்ற நிலையிலும், அந்த படத்தை இங்கே தியேட்டரில் பார்க்க யாருமே வரவில்லை என அவரே பல மேடைகளில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    சிங்கிள் ஷாட் மூவி

    சிங்கிள் ஷாட் மூவி

    ஒரே ஒரு சிங்கிள் ஷாட்டில் சில நிமிடங்கள் ஒரு நடிகர் ஆடினாலோ அல்லது நடித்தாலோ, பெரிய வசனத்தை பேசினாலோ அதை எடுத்துப் போட்டு அந்த ஹீரோவின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடும் நிலையில், ஹாலிவுட்டுக்கே சவால் விடும் அளவுக்கு ஒட்டுமொத்த படத்தையும் ஒரே சிங்கிள் ஷாட்டில் எடுத்து முடித்திருக்கிறார் பார்த்திபன். இந்நிலையில், திட்டமிட்ட நிலையில் அவரது படம் ரிலீஸ் ஆவதே சிக்கல் என்கிற சோதனை ஏற்பட்டுள்ளது.

    பார்த்திபனுக்கு சிக்கல்

    பார்த்திபனுக்கு சிக்கல்

    விருது பெறும் நோக்குடன் 'இரவின் நிழல்' என்ற படத்தை தனது அகிரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாக கூறி, நவீன் எண்டர்பிரைசஸ் பாஸ்கர ராவிடம் படப்பிடிப்புக்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நடிகர் பார்த்திபன் வாங்கியுள்ளார். அதற்கான வாடகை பாக்கி 25 லட்சத்து 13 ஆயிரத்து 238 ரூபாயை செட்டில் செய்யமல் ஜூலை 15ஆம் தேதி படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி பாஸ்கர ராவ் வழக்கு தொடர்ந்தார்.

    நீதிமன்றம் உத்தரவு

    நீதிமன்றம் உத்தரவு

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, வழக்கு குறித்து நடிகர் பார்த்திபன், அவரது நிறுவனம், அதன் இயக்குனரான அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12க்கு தள்ளி வைத்துள்ளார். ஜூலை 15ம் தேதி இரவின் நிழல் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A Case filed against on Parthiban and his daughter and claims hold the Iravin Nizhal release for not paying money for cinematography instruments by Akira productions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X