twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “சர்ச்சையில் சிக்கிய பிரபாஸ்… ஆதிபுருஷ் டீசருக்கு எதிராக டெல்லியில் முதல் வழக்கு!

    |

    டெல்லி: பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர் கடந்த 2ம் தேதி அயோத்தியில் இருந்து வெளியிடப்பட்டது.

    பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

    ஆதிபுருஷ் டீசர் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    “யப்பா இது ராவணன் இல்லப்பா.. அலாவுதீன் கில்ஜி”: ஆதிபுருஷ் டீசரை கலாய்த்த சக்திமான் நடிகர்!“யப்பா இது ராவணன் இல்லப்பா.. அலாவுதீன் கில்ஜி”: ஆதிபுருஷ் டீசரை கலாய்த்த சக்திமான் நடிகர்!

    பிரபாஸுக்கு இது சோதனை காலம்

    பிரபாஸுக்கு இது சோதனை காலம்

    பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் 2ம் தேதி வெளியானது. இந்தப் படம் 2023 ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், அனிமேஷன் டெக்னாலஜியில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் டீசரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். ஏற்கனவே பிரபாஸின் படங்கள் வரிசையாக தோல்வியடைந்து வரும் நிலையில், ஆதிபுருஷ் டீசர் ட்ரோல் செய்யப்பட்டது பிரபாஸ் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

    சைஃப் அலிகானுக்கு ராவணன் ரோல்

    சைஃப் அலிகானுக்கு ராவணன் ரோல்

    ஆதிபுருஷ் படத்தில், பிரபாஸ் ராமராகவும் கிருத்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். அதேபோல் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ராவணன் கேரக்டரில் நடித்துள்ளார். சைஃப் அலிகானை ராவணனாக நடிக்க வைத்ததற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இஸ்லாமியரான சைஃப் அலிகான் எப்படி ராவணனாக நடிக்கலாம் என சர்ச்சைகள் கிளம்பின. அதேபோல், ஹனுமான் தோல் ஆடை அணிந்திருப்பதா என்றும் கேள்விகள் எழுந்தன. இதனால், ஆதிபுருஷ் படம் வெளியாகும் போது பல தடைகள் வரும் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். . .

    டெல்லியில் வழக்கு

    டெல்லியில் வழக்கு

    இதனிடையே, ஆதிபுருஷ் டீசரை சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணாவும் கலாய்த்திருந்தார். தனது 'Bheeshm International' யூடியூப் சேனலில் ஆதிபுருஷ் டீசரில் வரும் பாத்திரங்களின் சித்தரிப்பு கேள்விக்குரியதாக உள்ளன. எந்த பாத்திரங்களும் இயல்பாகவே இல்லை எனக் கூறியிருந்தார். இதுபோன்ற படம் எடுத்தால் கதையின் பிம்பத்தையும் பார்வையாளர்களின் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும் எனக் காட்டமாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில், ஆதிபுருஷ் டீசருக்கு எதிராக டெல்லியில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராவணன் தவறாக சித்தரிப்பு

    ராவணன் தவறாக சித்தரிப்பு

    அந்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த ராவணன் சிவ பக்தர் எனவும் அவர் சுமார் 64 கலைகள் கற்றவர். இந்நிலையில் ராவணனுக்கு ஜாக்கெட் அணிந்து, நீல நிற கண்களுடன் சர்வாதிகாரி போல் டீசரில் தவறாக காட்டப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய செயலானது வரலாற்றை மாற்றியமைக்கும் எனக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. .

    English summary
    Prabhas starrer Adipurush is being made with a budget of 500 crores. The film team has announced that Adipurush will release next year on January 12th. Adipurush teaser was trolled by Netizens. In this case, A case has been registered in Delhi against the teaser of Adipurush. It has been reported that this case has been filed for misrepresentation of Ravana in the Adipurush teaser.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X