»   »  மாவீரன் கிட்டு... திரைக்கதையில் ஒரு தடாலடி மாற்றம்!

மாவீரன் கிட்டு... திரைக்கதையில் ஒரு தடாலடி மாற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த வாரம் வெளியாகி பரவலான பாராட்டுகளுடன் ஓடிக் கொண்டிருக்கும் மாவீரன் கிட்டு படத்தின் திரைக்கதை அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களின் கருத்துக்கிணங்க, இரண்டாம் பாதியில் முக்கிய காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


A complete make over in Maaveeran Kittu script

விஷ்ணு, விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிக்க, சுசீந்திரன் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு படம் சமீபத்தில் வெளியானது. இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதுவதுடன் இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகியுள்ளார் கவிஞர் யுகபாரதி.


இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன. அதே நேரம், இடைவேளைக்குப் பிந்தைய திரைக்கதை அமைப்பில் சில மாற்றங்கள் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இந்தப் படம் வந்திருக்கும் என்று வந்த விமரிசனங்களைத் தொடர்ந்து இதன் திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இதுதொடர்பான செய்திக்குறிப்பில், "இன்றுமுதல் திரைக்கதையின் சுவாரசியத்தை முன்னிட்டு படத்தின் இரண்டாம் பகுதியில் திரைக்கதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Director Suseenthiran has changed the screenplay of his recently released Maaveeran Kittu movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil