»   »  குடும்பத்தை காப்பாற்ற சென்னையில் மளிகைக் கடை வைத்த இயக்குனர்

குடும்பத்தை காப்பாற்ற சென்னையில் மளிகைக் கடை வைத்த இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 படங்களை இயக்கிய பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி மளிகைக் கடை நடத்தி வந்த ஏ.ஆர். சூரியன் விளையாட்டு ஆரம்பம் படம் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார்.

ஏ.ஆர். சூரியன் அம்மா அப்பா செல்லம், சிங்கள படம் மற்றும் வில்லாளன் ஆகிய மூன்று படங்களை இயக்கினார். இதில் அம்மா அப்பா செல்லம் படத்திற்கு சிறந்த படத்திற்கான தமிழக அரசு விருது கிடைத்தது.

3 படங்களை இயக்கிய பிறகு அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

மளிகைக் கடை

மளிகைக் கடை

சினிமாவில் இருந்து ஒதுங்கிய சூரியன் வருமானத்திற்காக சென்னை பள்ளிக்கரணையில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் தான் அவர் மீண்டும் படம் இயக்கியுள்ளார்.

விளையாட்டு ஆரம்பம்

விளையாட்டு ஆரம்பம்

யுவன், ஷ்ராவ்யா நடித்துள்ள விளையாட்டு ஆரம்பம் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வந்துள்ளார் சூரியன். இந்த படத்தை விஜய் ஆனந்துடன் சேர்ந்து அவர் இயக்கியுள்ளார்.

இயக்கம்

இயக்கம்

மளிகைக் கடை நடத்தி வந்த என்னை விளையாட்டு ஆரம்பம் படத்தை தன்னுடன் சேர்ந்து இயக்குமாறு விஜய் ஆனந்த் கூறி அழைத்து வந்தார். என் நாடகம், குறும்படங்கள், சீரியலில் விஜய் ஆனந்த் நடித்துள்ளார். அந்த நன்றிக் கடனோ என்னவோ தனக்கு கிடைத்த வாய்ப்பை என்னுடன் பகிர்ந்துள்ளார் என்றார் சூரியன்.

ரிலீஸ்

ரிலீஸ்

யுவன், ஷ்ராவ்யா, டாக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள விளையாட்டு ஆரம்பம் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் இந்த மாதம் ரிலீஸாகிறது.

English summary
Director Suriyan who was running a grocery store in Chennai is back in Kollywood with Vilaiyattu Arambam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil