twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்வதால் சினிமா அழிந்துவிடாது.. சூர்யா ஜோவுக்கு பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!

    |

    சென்னை: பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய தடை செய்யக்கூடாது என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கோரிக்கை விடுத்துள்ளார்.

    Recommended Video

    OTT யால் சினிமா THEATER அழியாது | PRODUCER THANU |பொன்மகள் வந்தாள் MOVIE ISSUE | Oneindia Tamil

    ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த மாதமே ரிலீஸ் ஆக வேண்டியது.

    ஆனால் கொரோனாவால் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் அமேசான் நிறுவனம் நல்ல விலைக்கு படத்தை வாங்கியதால், நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

    தயாரிப்பு நிறுவனம் உறுதி

    தயாரிப்பு நிறுவனம் உறுதி

    படம் டிஜிட்டலில் ரிலீஸ் ஆனால் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாது. திரையரங்குகளுக்கான வருவாய் பாதிக்கும். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தயாரிப்பு நிறுவனம் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய உறுதியாக உள்ளது.

    தயாரிப்பாளர் ஆதரவு

    தயாரிப்பாளர் ஆதரவு

    இதனால் இனிமேல் சூர்யா, ஜோதிகா படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    மார்ச் மாம இறுதியில்

    மார்ச் மாம இறுதியில்

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில்,
    பொன்மகள் வந்தாள் படத்தை அமேஸானில் கொடுத்ததில் தவறில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படம் மார்ச் மாத இறுதியில் வெளியாகியிருந்தால் ஏப்ரல் மாதம் முழுக்க தியேட்டரில் ஓடி மே மாதம் OTT ப்ளாட்பார்மில் வெளியிடப்பட்டு இருக்கும்.

    எவ்வளவு இழப்ப ஏற்பட்டதோ?

    எவ்வளவு இழப்ப ஏற்பட்டதோ?

    ஆனால், ஏப்ரல் மாதம் முழுக்கவே கொரோனா பாதிப்பினால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்தத் தயாரிப்பாளர் நினைத்தப்படி படத்தை ரிலீஸ் செய்யமுடியாமல் போனதால் எத்தனை கோடி இழப்பு ஏற்பட்டதோ? இந்நிலையில் டிஜிட்டல் ஒப்பந்தம் படி நடந்து கொள்ளாமல் போனால் அந்த தொகையும் வராமல் இழப்பு ஏற்படும்.

    சினிமா அழிந்துவிட்டதா?

    சினிமா அழிந்துவிட்டதா?

    இந்த OTT பணத்தையும் இழந்துவிட்டால் என்ன செய்வது? நண்பர்களே, திரையரங்குகளுக்கு எந்தக் காலத்திலுமே அழிவில்லை. தொலைக்காட்சி வந்தபோது சினிமா அழிந்து விடும் என்றோம். வீட்டுக்கு வீடு சிடி ப்ளேயர் வந்தவுடன் சினிமா அழிந்தது என்றோம். 50 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்து வெளியிட்டால், அன்றைக்கு இரவே இணையத்தில் வந்துவிடும். இதனால் சினிமா அழிந்துவிட்டதா?

    வரவேற்க வேண்டும்

    வரவேற்க வேண்டும்

    அந்த மாதிரி தான் இந்த OTT ப்ளாட்பார்ம். வருடத்துக்கு 12 முதல் 15 படங்கள்தான் வாங்குவார்கள். அதிலும் பெரிய படங்களாக வாங்கிவிட்டார்கள் என்றால், சின்ன படங்களை வாங்கவே மாட்டார்கள். அத்தி பூத்தாற்போல் ஒரு சின்ன படம் வாங்கியிருக்கும்போது இதை வரவேற்க வேண்டும். இதற்குத் தடைபோட்டு விடாதீர்கள்.

    ஏழைகளுக்கு உதவும்

    ஏழைகளுக்கு உதவும்

    சினிமாவை அழிக்கவே முடியாது. ஒரு வழி அடைத்தால் கடவுள் இன்னொரு வழி கொடுப்பார். அதனால் நமக்கு நல்லதொரு தீர்வைக் கடவுள் தருவார். சூர்யா நிறையவே கல்வி உதவி செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் தொகையும் பல ஏழைகளுக்கு உதவும். இவ்வாறு தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

    English summary
    A familiar Producer Dhanu supports Surya and Jyothika. He supports Ponmagal vandhal movie release in OTT Platform.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X