»   »  அட, அதுக்குள்ள இந்த 'ரெஜினா மோத்வானி'க்கு தனி ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிட்டீங்களா?

அட, அதுக்குள்ள இந்த 'ரெஜினா மோத்வானி'க்கு தனி ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிட்டீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரெஜினா மோத்வானி.. அதாங்க ரெமோ... அவங்கதான் இப்ப கோலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுன்.

படம் நல்லாருக்கோ நல்லால்லையோ... அதை விட்டுத் தள்ளுங்க. ஆனா ரெமோ வருகிற சிவகார்த்திகேயன் ச்சும்மா பின்னிட்டாரு என கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.


A fan club for Regina Mothwani aka Remo

போட்டிருக்கிறது பெண் வேஷம்தான்... அதுக்குள்ள சிவகார்த்திகேயன் என்கிற ஒரு ஆண் ஒளிந்திருக்கிறார் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். அத்தனை தத்ரூபம். இதுவரை தமிழ் சினிமாவில் பெண் வேடம் போட்டவர்களையெல்லாம் அப்படி ஓரமாக உட்கார வைத்துவிட்டார் எஸ்கே. விதிவிலக்கு ஆணழகன் பிரஷாந்த்!


இந்த வேஷத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்ன தெரியுமா... படம் வெளியாகி 24 மணி நேரம் முடிவதற்குள் ரெஜினா மோத்வானி என்கிற ரெமோவுக்கு தனி ரசிகர் மன்றமே தொடங்கிவிட்டார்கள் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்!

English summary
Some of the die hard fans of Sivakarthikeyan have started a fan club for his character Regina Mothwani alias Remo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil