நீங்க ஹீரோவா நடிப்பீங்களா? தீவிர ரசிகரின் சூப்பர் கேள்வி… கூலாக பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர் ஒருவர் நீங்க ஹீரோவா நடிப்பீங்களா என்று கேட்டுள்ளார். இதற்கு, ஏ.ஆர் ரஹ்மான் அளித்துள்ள சூப்பரான பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஹ்மானின் பதிலளிக்கும் அவரது மகன் அமீனும் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இணையத்தில் வெளியாகி உள்ள தந்தை மற்றும் மகனின் கருத்துக்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இசைப்புயல்

இசைப்புயல்

90-களின் துவக்கத்தில் தமிழ் சினிமாவில் மையம் கொண்ட இசைப்புயல் ஒன்று 25 ஆண்டுகளை கடந்தும் உலக இசை வரலாற்றில் புது சகாப்தங்கள் எழுதிக் கொண்டே இருக்கின்றது. அந்த இசைப்புயலின் பெயர் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தில் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அதுவரை தமிழ் செவிகளுக்கு எட்டிராத புதிய டிஜிட்டல் இசையை தேனாக ஊற்றியது.

தேசிய விருது

தேசிய விருது

ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. முதல் திரைப்படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றவர் என்ற சாதனையை இன்றளவிலும் தன்வசம் வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

கைதேர்ந்தவர்

கைதேர்ந்தவர்

இளையராஜா, டி ராஜேந்தர் என முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசை குழுவிலும் பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் டிஜிட்டல் கருவிகளில் கைதேர்ந்தவர் என்பதால், அன்றைய இசையமைப்பாளர்கள் பலரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தார். விளம்பரப் படங்கள் உள்பட ஏ.ஆர்.ரஹ்மான் அன்றைய நாட்களில் இசைத்த ஜிங்கிள்ஸ் இன்றும் ரசிகர்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

கிராமியப் பாடலிலும் ஜொலித்தார்

கிராமியப் பாடலிலும் ஜொலித்தார்

கம்ப்யூட்டரில் இசையமைக்கும் ரஹ்மான் ஒருநாளும் கிராமியப் பாடல்களில் ஜொலிக்க முடியாது என எழுந்த விமர்சனங்களுக்கு உழவன், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற படங்கள் மூலம் பதிலளித்தார். தமிழில் ரஹ்மான் இசையமைத்த பல பாடல்களும் பாலிவுட் ரசிகர்களின் கவனம் பெற்று வந்த நிலையில், ரங்கீலா திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, இந்தியா முழுவதும் ரசிகர்கள் உருவாகினர்.

எல்லா புகழும் இறைவனுக்கே

எல்லா புகழும் இறைவனுக்கே

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். இனி சாதிக்க ஒன்றுமே இல்லை என்னும் அளவிற்கு எல்லா சாதனைகளையும் படைத்தவர். எத்தனை எத்தனை சாதனைகளை படைத்தாலும். எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் எல்லா புகழும் இறைவனுக்கே என்று புகழ் மாலைகளை துச்சமாக கடந்து செல்வதுதான் ரகுமான் பண்பு.

ஆஸ்கார் விருது நாயகன்

ஆஸ்கார் விருது நாயகன்

இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழி படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களால் இசைப்புயல் என அழைக்கப்பட்டார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல பெரிய விருதுகளை பெற்றுள்ளார். இயல்பாக பேசுவது, டிவிட்டர் ஸ்பேஸ்களுக்கு சத்தமின்றி விசிட் அடித்து சர்ப்ரைஸ் கொடுப்பது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பெரிய அளவில் செலிப்ரிட்டி கிரீடம் சுமக்காத சிம்பிள் மேன்.

ரசிகரின் சூப்பர் கேள்வி

ரசிகரின் சூப்பர் கேள்வி

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஏ.ஆர் ரஹ்மானிடம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இதில் ஒரு ரசிகர் நீங்கள் எப்போது ஹீரோவாக நடிப்பீர்கள்..?என்று கேட்டுள்ளார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், எனக்கு வயதாகிவிட்டது, நான் நிம்மதியாக இருக்கிறது பிடிக்கலையா என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். இதற்கு ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீன் உங்களுக்கு வயதாகவில்லை அப்பா, நாங்கள் அனைவரும் உன்னை நேசிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள தந்தை மற்றும் மகனின் கருத்துக்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

சிங்கப்பெண்ணே பாடலில்

சிங்கப்பெண்ணே பாடலில்

ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2019ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வரும் சிங்கப்பெண்ணே பாடலின் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இதையடுத்து, மலையாள திரைப்படமான ஆராட்டுவில் பாடல் காட்சி ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் மற்றும் மசாலா திரைப்படமான இப்படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X