»   »  திருக்குறளை வைத்து உருவாகும் படத்தில் மோகன்பாபுவின் மகன்! - இரு மொழிகளில் தயாராகிறது

திருக்குறளை வைத்து உருவாகும் படத்தில் மோகன்பாபுவின் மகன்! - இரு மொழிகளில் தயாராகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு நடிக்கும் முதல் நேரடித் தமிழ் படம் 'குறள் 388'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. தெலுங்கில் 'ஓட்டர்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சுரபி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர சம்பத்ராஜ், போசாளி கிருஷ்ண முரளி, நாசர், பிரகதி, முனீஸ்காந்த், பிரமானந்தம் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார்.

A film about thirukkural play by mohanbabu's son

ஏழு வார்த்தைகளே கொண்ட திருக்குறளின் மூலம் சொல்லப்படாத கருத்துக்கள் எதுவும் இல்லை. "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்" என்ற 388-வது குறளின் கருத்துக்கள் தான் இந்தப் படத்தின் கதைக் கரு. அதாவது மக்களை முறையாகப் பராமரித்து காக்கின்ற மன்னன். அந்த மக்களுக்கு இறைவனைப் போன்றவன் என்பது அந்த குறளின் கருத்து.

A film about thirukkural play by mohanbabu's son

'இன்றைய காலக்கட்டத்துக்குத் தேவையான பரபரப்பான கருத்தை உள்ளடக்கிய படமாக 'குறள் 388' உருவாகிறது. இந்தப் படம் எனது தமிழ் திரையுலகப் பிரவேசத்துக்கு சரியான படமாக இருக்கும்' என மனோஜ் மஞ்சு கூறியிருக்கிறார்.

English summary
Mohan Babu's son Manju Vishnu made his debut in Tamil by 'Kural 388'. The film is made about the 388th Thirukkural. In this film, Surabhi is heroine, Nassar and Muniskanth are acting in charcater roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil