பரமபத பாம்பு கொத்திடுச்சு.. கடகடவென ஏறிய வேகத்தில் சறுக்கிய லோகேஷ் கனகராஜ்.. என்ன ஆச்சு?

சென்னை: பரம பத விளையாட்டில் சிலருக்கு ஏகப்பட்ட ஏணிகள் கிடைத்து விரைவில் மேலே சென்று விடுவார்கள். ஆனால், கடைசியில் இருக்கும் அந்த ஆதிசேஷ்ன் கொத்தி விட்டால் ஏறிய வேகத்தை விட வீழ்ச்சி ரொம்ப பெரிய பாதிப்பை உண்டாக்கும். அதுபோலத்தான் தற்போது லோகேஷ் கனகராஜ் நிலைமையும் மாறியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

டிராகன் படத்தில் பேஸ்மெண்ட் சரியாக போடவில்லை என்றால் பில்டிங் சரிந்து விடும் என்பதை இயக்குநர் மிஷ்கின் பிரதீப் ரங்கநாதனுக்கு சொல்லி புரிய வைப்பார். தன்னுடைய முயற்சியால் சினிமாவில் இயக்குநராக மாறிய லோகேஷ் கனகராஜ் கடகடவென உயர்ந்து வந்த நிலையில், ரஜினிகாந்த் படத்தை சரியாக கொடுக்க முடியாத சூழலில் அவரது வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்று கூறுகின்றனர்.

A Great Downfall of Lokesh Kanagaraj who missed the big chances due to Coolie s poor reception
Photo Credit:

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இயக்குநரை இன்னும் முடிவு பண்ணல என ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டி லோகி ரசிகர்களுக்கு பேரிடியாக வந்து விழுந்துள்ளது.

ஷங்கருக்கு நேர்ந்த கதி: பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை பார்த்து தான் இந்திய சினிமாவில் ராஜமெளலி உள்பட பல இயக்குநர்கள் மெகா பட்ஜெட்டில் படங்களை உருவாக்கத் தொடங்கினர். சிஜி, க்ரீன் மேட் பக்கமெல்லாம் காலடி எடுத்து வைத்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கே மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு படங்கள் தோல்வியடைந்த நிலையில், பிரேக் எடுத்து வந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார். அமீர்கான் பிரேக் எடுத்து வந்து மீண்டும் படங்களில் நடித்தாலும் அவரால் கம்பேக் கொடுக்க முடியவில்லை.

பரமபத பாம்பு கொத்திடுச்சு: மாநகரன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். விஜய்யின் பிகில் படத்தை விட அந்த படம் சூப்பராக உள்ளது என விமர்சனங்கள் குவிந்தன. லோகேஷ் மீது விஜய்யின் பார்வை பட்ட நிலையில், மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து தனது மானசீக குருவான கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார். மீண்டும் விஜய்யுடன் இணைந்து எல்சியூவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல லியோ படம் பண்ணினார். அதன் பிறகு ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அதே நேரத்தில் ரஜினிகாந்தின் படம் ரசிகர்களை கவராத நிலையில், பரமபத பாம்பு கொத்தியது போல கடகடவென கீழே வந்துவிட்டார் எனக் கூறுகின்றனர்.

A Great Downfall of Lokesh Kanagaraj who missed the big chances due to Coolie s poor reception
Photo Credit:

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படம் கைவிட்டுப்போனது: கூலி படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா என ஏகப்பட்ட ஸ்டார் நடிகர்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு அந்த படம் வெற்றியை கொடுத்திருந்தால், அமீர்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படத்தையும் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்கின்றனர். எல்சியூவை முழுமையாக லோகேஷ் கனகராஜ் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஹீரோவாக அசத்துவாரா?: ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தனுஷின் இளையராஜா பயோபிக் படத்தை இயக்குவார் என எதிர்பார்த்த நிலையில், அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், லோகேஷ் கனக்ராஜை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தின் மூலம் புதிய அத்தியாத்தை லோகேஷ் கனகராஜ் தொடங்குவாரா? மீண்டும் தனது கடுமையான உழைப்பால் வெற்றிக்கொடி நாட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X