twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமீரக கெடுபிடிக்கு இடையே ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வர உதவியது யார் தெரியுமா?

    By Siva
    |

    Recommended Video

    குடிபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை?- வீடியோ

    துபாய்: ஸ்ரீதேவியின் உடலை துபாயில் இருந்து மும்பை கொண்டு வர உதவியவர் அங்கு வசிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப்.

    திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவரின் உடலை இந்தியா கொண்டு வர அவரின் கணவர் போனி கபூர் சிரமப்பட்டார்.

    ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வர உதவியர் கேரளாவை சேர்ந்த அஷ்ரப்.

     ஸ்ரீதேவி

    ஸ்ரீதேவி

    சுற்றுலா விசாவில் அமீரகம் செல்பவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடலை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அமீரக குடியுரிமை உள்ள ஒருவர் உறுதியளித்து கையெழுத்து போட்டால் மட்டுமே உடலை இறந்தவரின் நாட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

    கேரளா

    கேரளா

    கேரளாவை சேர்ந்த அஷ்ரப் தாமரசெரி(44) போனி கபூருக்கு உதவ முன்வந்துள்ளார். ஸ்ரீதேவியின் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்கள் அனைத்திலும் போனி கபூர் அல்ல அஷ்ரபின் பெயர் தான் உள்ளது.

    இந்தியா

    இந்தியா

    அஷ்ரப் தாமாக முன்வந்து உதவி அனைத்து விண்ணப்பங்களிலும் கையெழுத்திட்டு உறுதி அளித்ததால் தான் ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு செல்ல அமீக அதிகாரிகள் சம்மதித்தார்கள்.

    அமீரகம்

    அமீரகம்

    நேற்று மட்டும் ஸ்ரீதேவியின் உடலோடு சேர்த்து 6 உடல்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்க உதவியுள்ளார் அஷ்ரப். நாடு விட்டு நாடு வந்து இறப்பவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதை சேவையாக செய்து வருகிறார் அஷ்ரப்.

    நாடுகள்

    நாடுகள்

    அஷ்ரப் இதுவரை 4 ஆயிரத்து 700 உடல்களை 38 நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சேவை தனது மனதிற்கு நிறைவாக உள்ளதாக அஷ்ரப் தெரிவித்துள்ளார். ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் பார்க்காமல் உதவுகிறார் அஷ்ரப்.

    English summary
    A 44-year-old Ashraf Thamarassery from Kerala who lives in UAE helped Boney Kapoor to repatriate his wife Sridevi's body to Mumbai. Ashraf has so far helped to repatriate 4,700 bodies to 38 countries.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X