இது என்ன சிவாவுக்கு வந்த சோதனை.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா.. கதறவிடும் மீம்ஸ்!
சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவை கலாய்த்துள்ள மீம் ஒன்று வைரலாகி வருகிறது.
எந்த மாதிரியான சீரியஸ் சம்பவம் என்றாலும் ஒற்றை வரியில் ஒரு டயலாக் போட்டு அதை காமெடியாக்கி விடுகின்றனர் மீம் கிரியேட்டர்ஸ்.
அரசியல், சினிமா, ஸ்போர்ட்ஸ், மழை, வெயில் என எது தொடர்பாக இருந்தாலும் சரி அது சம்பந்தமாக மீம்மை கிரியேட் செய்து ஜோலியை முடித்து விடுகிறார்கள்.

வடிவேலு மீம்ஸ்
மீம்ஸ்களுக்காக மீம் கிரியேட்டர்கள் தேர்வு செய்யும் போட்டோக்களும் வசனங்களும் அடடே என்று சொல்லும் அளவுக்கே இருந்து வருகிறது. அதிகம் வடிவேலுவின் சினிமா காட்சிகள் மற்றும் அவருடைய டயலாக்கை வைத்தே மீம்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

வைரலாகும் மீம்ஸ்
மீம்களை ரசிப்பதற்கு என்றே சமூக வலைதளங்களில் ஒரு பெரும் கூட்டம் வலம் வருகிறது. இந்நிலையில் சிறுத்தை சிவாவை கலாய்த்து ஷேர் செய்யப்பட்டு வரும் மீம் ஒன்று இணையத்தில் பலரது கவனத்தை பெற்று வருகிறது.

சென்னையில் பெரு வெள்ளம்
மீம் பிக்சரில் குறிப்பிட்டுள்ளதாவது, 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போதும் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் தான் ஃபைனலுக்கு சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியே ரிப்பீட்டு...
அந்த சம்பவங்கள் அப்படியே 2021ல் ரிப்பீட் ஆகியிருப்பதாக, மாநாடு படத்தில் எஸ்ஜே சூர்யா ஒய்ஜி மகேந்திரனிடம் மாடுலேஷனில் பதிவிட்டுள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் வெளியானது.

20 ஓவர் உலகக்கோப்பை
கடந்த சில நாட்களாக சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழையால் சென்னை மாநகரின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதேபோல் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஃபைனலில் மோதுகிறது.

எப்படி இப்படி யோசிக்கிறீங்க?
இதை வைத்து ஒரு மீம்மை கிரியேட் செய்து திணறடித்து வருகின்றனர் மீம் கிரியேட்டர்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன சிறுத்தை சிவாவுக்கு வந்த சோதனை என்றும், இப்படியெல்லாம் எப்படியப்பா யோசிக்கிறீங்க என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











