twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜாவின் ரசிகர்களுடன் ஒரு பொன் காலைப் பொழுது..!

    By Sudha
    |

    சென்னை: சங்கீத சாம்ராட்டின் இசை ரசிகர்களுடன் கழிந்த அந்த 4 மணி நேரமும்.. நானாக நானில்லை தாயே.. என்று தான் பாடத் தோன்றியது.. அப்படி ஒரு அழகான இசை உலாவல்... கருத்துக் குலாவல்.. பாட்டுக் கச்சேரி.. அதில் இழைந்தோடிய சின்னச் சின்ன 'ஆர் என் டி' ஆச்சரியங்கள்... இதற்காகவே பெரிய ஸ்பெஷல் தேங்ஸ் கொடுக்கலாம் இளையராஜா யாஹு குரூப் ஏற்பாடு செய்திருந்த அந்த ரசிகர்கள் சந்திப்புக்கு.

    என்ன பேசப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் போன நமக்கு.. இவ்வளவு இருக்கிறதா இசைஞானி குறித்துப் பேச என்ற ஆச்சரியம்தான் வந்து முட்டி மோதியது... பார்க்கப் பார்க்க!.

    ஏதாவது பேசலாம் என்று மனதுக்குள் முடிவெடுத்து வாயைத் திறக்க முயற்சித்தபோதெல்லாம் ஏதாவது ஒரு குரல்.. ஒரு ஆச்சரியத் தகவலுடன் நமது காதுகளைக் கவ்விக் கொண்டுபோனபோது... அடடா.. அருமையான அனுபவம் அது.

    நான்கு மணி நேரம் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைக் கேட்ட எபக்ட் நமக்கு...

    28வது இசைச் சந்திப்பு

    28வது இசைச் சந்திப்பு

    இசைஞானியின் ரசிகர்களுக்காகவே, அவரது ரசிகர்களால் ஏற்படுத்தப்பட்ட குழுமம்தான் இளையராஜா யாஹு குழுமம். இதுவரை 27 முறை ராகதேவனின் இசை ஆலாபனைகளை ஒவ்வொரு டாப்பிக்காக எடுத்து கருத்துக்களைக் கோர்த்து கூடிக் கலைந்த இந்த குழுமத்தின் 28வது சந்திப்பு கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்தது.

    ஏக ஆர்வம்... அழகான விவாதம்

    ஏக ஆர்வம்... அழகான விவாதம்

    சென்னை ஆயிரம் விளக்கு, ஆஷா நிவாஸ் சமூக நல மையத்தில் கூடிய இந்த இசைச் சங்கமம், ஆரம்பித்த நிமிடம் முதல் முடியும் வரை இசைஞானியின் இசையைப் போலவே எந்தத் தொய்வும் இல்லாமல் போனது பெரும் ஆச்சரியம்தான்.. உண்மையில் எப்படி முடிப்பது என்றே தெரியவில்லை குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு.. அப்படி விடாமல் நீண்டு கொண்டே போனது கலந்துரையாடல்.

    ராஜாவின் அரிய பாடல்கள்

    ராஜாவின் அரிய பாடல்கள்

    1976 முதல் 1982 வரை இசை ராஜா இசையமைத்த பாடல்களில் அரிய பாடல்களை, அதாவது யாருமே அதிகம் கேட்டிராத, அற்புதமான பாடல்கள் குறித்த விவாதம்தான் அன்றைய தினம் தலைப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு பேசப்பட்டது.

    ராஜாவின் பில்லா.. தெரியுமா...?

    ராஜாவின் பில்லா.. தெரியுமா...?

    டாக்டர் ஸ்ரீதர் முருகையனின் ஜனனி ஜனனியில் தொடங்கிய விவாதத்தை டாக்டர் விஜய் வெங்கட்ராமன் ஒரு அருமையான தகவலுடன் விறுவிறுப்பாக்கினார்.. அதுதான் பில்லா.. அதாவது யுகந்தர். தமிழில் வெளியான பில்லாவை நம்மவர்களுக்குத் தெரியும்.. அதிலும் மை நேம் இஸ் பில்லாவை நன்றாகவே தெரியும்.. ஆனால் தெலுங்கு பில்லாவைத் தெரியுமா.. அதிலும் இசைஞானி இளையராஜா அந்தப் படத்தில் என்.டி.ஆருக்காகப் போட்ட சூப்பர் ஹிட் பாட்டைத் தெரியுமா...

    என்.டி.ஆரின் ரசிகர்களின் ஹிட் பாடல்

    என்.டி.ஆரின் ரசிகர்களின் ஹிட் பாடல்

    நேனே யுகந்தர் என்ற பாட்டுத்தான் இந்தி, தமிழ் என பில்லா மூலமாக வெளியான மை நேம் இஸ் பில்லா பாடல். தமிழில் வந்த பில்லாவுக்கு முன்பாகவே யுகந்தரில் இசைஞானி அந்தப் பாட்டைப் போட்டு தெலுங்கில் பெரும் ஹிட்டாக்கியுள்ளார்.. அதுவும் என்டிஆரின் திரை வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் வெளியாகி அவரது ரசிகர்களின் நிரந்தர ஹிட் பாடலாக இன்றளவு திகழ்கிறது.. பாட்டைக் கேட்டபோது உண்மையிலேயே சிலிர்த்தது.

    திரில் டி.எம்.எஸ்.. சிலிர்க்க வைத்த ராஜா..

    திரில் டி.எம்.எஸ்.. சிலிர்க்க வைத்த ராஜா..

    அதேமாதிரி இன்னொரு படம். வெற்றிக்கு ஒருவன். இதில் இடம் பெற்ற ஒரு பாடலைக் கேட்டபோது செம ஆச்சரியமாக இருந்தது.. காரணம், அதைப் பாடியவர் டி.எம்.எஸ். அந்தப் பாடல் ஒரு துள்ளல் இசைப் பாடல்... அப்படி ஒரு இசை.. அதை விட டிஎம்எஸ்ஸின் அந்த வெண்கலக் குரலை இளையராஜா வளைத்து வசீகரிக்க வைத்த விதம்.. பாட்டைக் கேட்டால்தான் இதை ரசிக்க முடியும்.. சிம்ப்ளி சூப்பர்ப்.. இந்தத் தகவலையும் சொன்னவர் டாக்டர் விஜய்தான்.

    களேபர ராக் அன்ட் ரோல்

    களேபர ராக் அன்ட் ரோல்

    இதில் விசேஷமே இளையராஜாவின் இந்த ராக் அன்ட் ரோல் ரகளைதான்.. இந்தப் படம் வந்த வருடம் 1979... அந்த அடியில் இருக்கும் அதிரடியைக் கேளுங்கள்.. செம ரகளையாக இருக்கிறது .. http://www.youtube.com/watch?v=NbHaKqW8KpI

    எவ்வளவு சேதி...

    எவ்வளவு சேதி...

    இந்தப் பாடலில்தான் எத்தனை சேதி.. டி.எம்.எஸ். குரலை வைத்து விளையாடியிருக்கிறார் ராஜா... அந்தக் காலத்திலேயே ராஜா செய்த இந்த புதிய முயற்சியை இப்போது கேட்டாலும் சிலிர்க்க வைக்கிறது.

    இடை இடையே 'தென்றல்' ஸ்ரீனிவாஸ்

    இடை இடையே 'தென்றல்' ஸ்ரீனிவாஸ்

    விறுவிறுப்பாகப் போன விவாதத்திற்கு இடை இடையே டாக்டர் ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள் அப்படியே நம்மை தாலாட்டி விட்டன.. அதிலும் வாடை வாட்டுது பாடலை அவர் ரசித்து உயிர்ப்புடன் பாடிய விதம்... ராஜாவுக்கு நன்றி.

    இசை ஆலாபனை நடத்திய சூப்பர் ரசிகர்

    இசை ஆலாபனை நடத்திய சூப்பர் ரசிகர்

    இந்த விவாதத்திலேயே செம ஹிட் ஒரு ரசிகரின் அட்டகாச இசை 'ஆராய்ச்சிதான்'. பெயர் நினைவில்லை.. ஆனால் ராஜாவின் ஒவ்வொரு பாடலையும் எடுத்து அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து, ராஜா எப்படி இசையமைத்திறார் என்பதை ரசித்துப் பாடி, லயிக்க வைத்த விதம் இருக்கிறதே.. ரசிகன்டா என்று சொல்லத் தோன்றியது.. பிரமாதமான ரசனை அவருக்கு.

    இப்படியெல்லாம் ரசிக்க முடியுமா...

    இப்படியெல்லாம் ரசிக்க முடியுமா...

    ஒவ்வொரு பாடலையும் எடுத்து அதில் எப்படி ராஜா இசையமைத்துள்ளார் என்பதை அவர் பாடியும், இசையை வாயாலேயே இசைத்தும் விளக்கிய விதம்.. இப்படியும் ரசிக்க முடியுமா என்றுதான் ஆச்சரியப்படத் தோன்றியது.

    4 மணி நேரம் போதுமா...??

    4 மணி நேரம் போதுமா...??

    இப்படி ஒவ்வொருவரும் ராஜாவின் அரிய பாடல்கள், அவரது பிரபலமான பாடல்களில் அடங்கியிருந்த சங்கதிகள், அதன் சிறப்புகள் என அடுக்கி வைத்த விதம்.. நேரம் போனதே தெரியவில்லை.. இந்தப் பாடலுடன், இந்தப் பேச்சுடன் முடிவுக்கு வருகிறது என்று டாக்டர் விஜய் கூறிக் கொண்டேதான் இருந்தார்.. ஆனாலும் அனுமார் வால் போல நீண்ட விவாதம்.. முடிக்க மனமில்லாமல்தான் நின்றது.

    உருக வைத்த தேனி கண்ணன்

    உருக வைத்த தேனி கண்ணன்

    இந்த கூட்டத்தின் முத்தாய்ப்பு பத்திரிக்கையாளர் தேனி கண்ணன், தனக்கும் ராஜாவுக்கும் இடையிலான தொடர்புகளையும், தனிப்பட்ட முறையிலான அவரது ஒரு அனுபவத்தையும் சொல்லியதுதான்.. உருக வைத்து விட்டார் மனிதர்.. ராஜாவின் இசைக்குள் புதைந்திருக்கும் அந்த மனித நேயத்தின் மறுபக்கத்தை மற்ற ரசிகர்களுக்கும் கோடிட்டுக் காட்டிய விதம்.. சூப்பர்ப்.

    முடிந்த கூட்டம்.. கண்காட்சியில் தொடர்ந்த கதை

    முடிந்த கூட்டம்.. கண்காட்சியில் தொடர்ந்த கதை

    விவாதக் கூட்டம் முடிந்த நிலையில், இளையராஜாவின் புகைப்படக் கண்காட்சிக்கும் ரசிகர் குழு விசிட் அடித்தது. கண்காட்சி நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான நான் பார்த்தபடி என்ற ராஜாவின் புகைப்பட பேனருக்கு அருகில் புகை்கப்படம் எடுத்து மகிழ்ந்தனர் யாஹு குழுமத்தினர்.

    அபாரமான ரசிகர்கள்

    அபாரமான ரசிகர்கள்

    வித்தியாசமான கூட்டம்.. வித்தியாசமான ரசிகர்கள் என்று சாதாரணமாக சொல்லி விட முடியாது.. விட்டால் பல யுகங்களுக்கு ராஜாவைப் பற்றி ரசிக்க ரசிக்கப் பேசக் கூடிய அபாரமான ரசிகர்கள் இவர்கள் ... இதுதான் கூட்டத்தை முடித்து விட்டு வெளியே தனியாக வந்தபோது மனதுக்குள் தோன்றிய ஒரே எண்ணம்.

    English summary
    28th meeting of Ilayaraja Yahoo group, held recently in Chennai, discussed the rare songs of the maestro.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X