»   »  தினசரி வாழ்க்கையின் அவலங்களை தட்டிக் கேட்க வரும் “திறந்திடு சீசே”

தினசரி வாழ்க்கையின் அவலங்களை தட்டிக் கேட்க வரும் “திறந்திடு சீசே”

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூகத்தில் நடைபெறும் குற்றங்களை மையமாக வைத்து வெளிவருகின்றதாம் திறந்திடு சீசே திரைப்படம்.

தன்ஷிகா, அறிமுக நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயண் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரது நடிப்பில் சுதாஸ் புரொடக்‌ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "திறந்திடு சீசே".

இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளவர் இயக்குனர் ஷங்கரின் இணை இயக்குனர் நிமேஷ்வர்ஷன்.

உண்மைச் சம்பவங்களே கதைக்கரு:

உண்மைச் சம்பவங்களே கதைக்கரு:

இப்படம் குறித்து தன்ஷிகா கூறும்போது, "உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு அமைத்திருந்த கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சார்மி என்ற பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன்.

மிகவும் பிடித்தமான கதாப்பாத்திரம்:

மிகவும் பிடித்தமான கதாப்பாத்திரம்:

இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு இந்த கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. எனினும் இந்தக் கதாபாத்திரத்தில் என்னால் சோபிக்க முடியுமா என்ற ஐயம் என்னுள் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.

உழைப்பில் வந்த நடிப்பு:

உழைப்பில் வந்த நடிப்பு:

என்னுடைய நடிப்பில் சிறிது அதிகமாய் உணர்வுகளைக் காட்டினாலும் படத்தின் முழு அளவியலே மாறிவிடக் கூடும். அவை எல்லாவற்றையும் சரி வர அமைத்து இந்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன்.

பெருமையான பாத்திரம்:

பெருமையான பாத்திரம்:

பெண்ணுக்கும் அவளது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் "திறந்திடு சீசே" படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது.

சமூக அவலங்களுக்கு எதிராக:

சமூக அவலங்களுக்கு எதிராக:

குடி பழக்கம், பாலியல் வன் கொடுமை என சமூக அவலங்களுக்கு எதிராக கருத்தமைப்பு கொண்ட ஒரு திரைப்படம் திறந்திடு சீசே.

குடும்பப் படம் இது:

குடும்பப் படம் இது:

இது குடும்பங்களுக்கான படம். சமுதாய நோக்குடன் திரைப்படத்தை தயாரிக்கும் இந்த கூட்டணியுடன் இணைந்து திறந்திடு சீசே படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது." என்று கூறினார்.

English summary
Social awareness oriented kollywood film “Tirantidu sesea” will release on his week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil