For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல!

  |

  சென்னை: இந்த வாரம் முழுக்க முழு ஈடுபாட்டுடன் எல்லா விஷயத்துல இருந்தவங்க யாருன்னு கேட்டதும், பாலாஜி சனம் ஷெட்டிக்கு ஓட்டுப் போட்டு, காதல் ரூட்டை ஆரம்பித்து வைத்துள்ளார்.

  Bigg Boss Day 18 Highlights • அர்ச்சனா Second பிக் பாஸ் போல? | Bigg Boss 4 Tamil

  நேத்து இதெல்லாம் நடந்துடுமோன்னு பயந்த பாலாஜி இன்னைக்கு பம்முறதையும், அதற்கு கேபி ஹார்ட் போட்டு காட்டுறதும் என புது டிராக்கை ஏற்கனவே நாம் சொன்னது போல பிக் பாஸ் ஆரம்பிக்கிறார் என தெரிகிறது.

  சுரேஷ் தாத்தா அந்த அளவுக்கு கேம் ஆடியும் கடைசியில நாட்டாமை அர்ச்சனா அக்காவுக்கு ஓட்டுப் போட்டது தான் ரசிகர்களை செம காண்டாக்கியது.

  இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டியேப்பா.. குட்டி ஜோசியர் ஆஜீத்.. தாத்தா தான் இந்த வாரம் அவுட்டாம்!

  பிச்சை எடுத்த பாலாஜி

  பிச்சை எடுத்த பாலாஜி

  நாடா? காடா? டாஸ்க்கில் எந்த இரு போட்டியாளர்கள் ரொம்ப நல்லா விளையாடினாங்கன்னு ஹவுஸ்மேட்களை பிக்பாஸ் தேர்வு செய்ய சொன்னதும், இந்த டீமில், சுரேஷ் தாத்தாவை விட்டுட்டு எல்லோரும் அர்ச்சனாவை தேர்வு செஞ்சாங்க, அந்த பக்கம் சனம் பெயர் அடிபட்ட நிலையில், பாலா தானாகவே எனக்கு ஓட்டுப் போடுங்கப்பா என அந்த டைட்டிலை வான்டட்டா கேட்டு வாங்கிட்டார்.

  சம்பவம் பண்ண கேபி

  சம்பவம் பண்ண கேபி

  யாருமே கேபிரியல்லாவுக்கு ஆதரவாக நிற்காத போது, தனி ஒருவனாக நின்று கேபியை தோள் மேல தூக்கி சுமந்த சுரேஷ் சக்கரவர்த்தியை, நாமினேட் பண்ண விடாம, சுரேஷ் தாத்தா நல்லாத் தான் விளையாடினார். ஆனால், கடைசியா ஒரு சம்பவம் பண்ணிட்டாரே என அர்ச்சனாவுக்கு ஆதரவா ஓட்டு போட்டு, தாத்தாவுக்கு ஆப்பு வைத்து விட்டார் செல்லப் பேத்தி. (நீ என்ன குத்துவியா.. இப்போ நான் உன்னை குத்துறேன்)

  பாதை மாறும் பாலாஜி

  பாதை மாறும் பாலாஜி

  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எல்லா விஷயத்திலும் ஈடுபாட்டுடன் இருந்தவர் யார் என பிக் பாஸ் கேட்டதும், பாலாஜி எல்லோரையும் முந்திவிட்டு சனம் ஷெட்டிக்கு ஓட்டுப் போட்டார். சனம்க்கு சந்தோஷம் அப்படியே பொங்கி வழியுது மூஞ்சில அப்படியே தெரியுது. என்னை பாலாஜி பாதை மாறுதேன்னு ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.

  ஹார்ட்டீன் போட்ட கேபி

  ஹார்ட்டீன் போட்ட கேபி

  இங்கேயும் கேபி சும்மா இல்லை உடனே ஹார்ட்டு போட்டுக் காட்டி பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் ஒரு லவ் ஸ்டோரியை க்ரியேட் பண்ணி விட்டுட்டாங்க, போன எபிசோடிலும், மியூசிக்கல் சேர் விளையாட்டின் போதும் இவங்க ரெண்டு பேரையும் கோர்த்து விட்டது கேபி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஜோடி மாறிப்போச்சு

  ஜோடி மாறிப்போச்சு

  பிக் பாஸ் எடிட்டர் கஷ்டப்பட்டு பாலாஜிக்கும் கேபிக்கும்லாம் லவ் தீம் போட்டு செட் பண்ண பார்த்தார். ஆனால், பாலாஜி கேபியை தங்கையாகத் தான் பார்க்கிறார் என்பது தெளிவாகி உள்ளது. கேபிக்கும் பாலாஜி மேல க்ரஷ் இல்லை, இதனால், டுபாக்கூர் பிரச்சனையில் ஆரம்பித்த மோதல் நாம் சொன்னது போலவே சீக்கிரம் காதலாக மலரும் என்றே தெரிகிறது.

  ஜெயித்த சனம்

  ஜெயித்த சனம்

  பாலாஜி சொன்ன உடனே சனம் ஷெட்டியா? ஏன் சொல்ற என ஜித்தன் ரமேஷ் சண்டைக்கு வர, சனம் ஷெட்டி, ஆரி, அனிதா மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்யும் முடிவுக்கு ஹவுஸ்மேட்ஸ் வந்தனர். கடைசியாக பாலாஜி ஓட்டுப் போட்ட சனம் ஷெட்டி தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் சகலகலாவல்லியானார்.

  யார் தலைவர்

  யார் தலைவர்

  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்த ரியோ ராஜின் பதவி பறிக்கப்பட உள்ள நிலையில், அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கு பாலாஜி, சனம் ஷெட்டி மற்றும் அர்ச்சனா ஆகிய மூன்று பேர் தான் போட்டியிட வேண்டும் என பிக் பாஸ் முடிவு செய்து அறிவித்து விட்டார். எப்படியோ அர்ச்சனா அல்லது சனம் தான் அடுத்த வார தலைவர் ஆவார் என தெரிகிறது.

  அப்போ ஷிவானி

  அப்போ ஷிவானி

  பாலாஜி முருகதாஸுக்கும் ஷிவானிக்கும் கூட ஒரு நல்ல கெமிஸ்ட்ரி ஆடலும் பாடலும் டாஸ்க் மற்றும் நாடா? காடா? டாஸ்க்கில் ஓடி பிடித்து விளையாடும் போது இருந்தது. ஆனால், இப்போ போற ரூட்டை பார்த்தா, ஷிவானிக்கும் பாலாஜிக்கும் கனெக்‌ஷன் ஆகாது போலத்தான் தெரியுது, பார்ப்போம் பெரிய பாஸ் என்ன பண்ணப் போகிறாரோ?

  English summary
  Balaji nominate Sanam Shetty for well performer in Bigg Boss house this week and Gabriella shows love symbol between Bala and Sanam make a new love track in Bigg Boss 4.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X