»   »  இது புதிய மைல்கல்லா... இன்னொரு தலைவலியா? பார்க்கத்தானே போறோம்!

இது புதிய மைல்கல்லா... இன்னொரு தலைவலியா? பார்க்கத்தானே போறோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
க்யூபுக்கு செக் வைக்கும் பக்கா பிளான்!- வீடியோ

இனி க்யூப், யுஎஃப்ஓவை போன்ற டிஜிட்டல் சேவை வழங்குபவர்களை மட்டும் தமிழ் சினிமா நம்பி இருக்கத் தேவையில்லை. மாற்று ஏற்பாடாக புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு வருகிறது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம்.

சில தினங்களுக்கு முன் ஏரோக்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். டிசிஐ அனுமதி பெற்ற இந்த நிறுவனம், மற்ற நிறுவனங்களைவிட 50 சதவீதம் குறைவாகவே கட்டணம் வசூலிக்கிறது.

A new Milestone in Tamil Cinema

இந்த நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொந்த மாஸ்டரிங் வசதியுடன் DCI, 2k , 4 k ப்ரஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்க ​​டிஜிட்டல் சேவை வழங்கும் மற்றொரு நிறுவனமான மைக்ரோப்ளக்ஸ் உடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தமிழ் சினிமாவில் இது பெரும் மைல்கல் ஆகப் பார்க்கப்படுகிறது. . இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்து படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களுக்கும் நேரடியாக கன்டன்ட் கொடுக்கப்படும்," என்று தெரிவித்துள்ளனர்.

க்யூப் உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் முதலில் தியேட்டர்களில் புரொஜக்டர்களை நிறுவ வந்தபோதும் இப்படிக் கூறித்தான் வரவேற்றனர் அபிராமி ராமநாதன் போன்றவர்கள். இந்த புதிய நிறுவனங்களாவது தியேட்டர்காரர்களுடன் சேர்ந்துகொண்டு தயாரிப்பாளர்களை ஏமாற்றாமல் இருந்தால் சரி.

English summary
Tamil Film Producer Council will now own the exclusive DCI 2K, 4K projection and servers through a brand called Microplex that has signed an agreement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X