»   »  விவேகம் படத்தின் 2வது போஸ்டர் இது தானா?: அதுக்குள்ள வைரலாகிடுச்சே!#vivegam

விவேகம் படத்தின் 2வது போஸ்டர் இது தானா?: அதுக்குள்ள வைரலாகிடுச்சே!#vivegam

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Select City
Buy Vivegam (U/A) Tickets

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது. கடும்குளிரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.


நாளை அஜீத் பிறந்தநாள் என்பதால் விவேகம் ஸ்பெஷலாக ஏதாவது வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


 போஸ்டர்

போஸ்டர்

கிழிந்த சட்டை, காயங்களுடன் அஜீத் பெரிய மரக்கட்டையை தோளில் தூக்கிக் கொண்டு ஆக்ரோஷமாக கத்துவது போன்ற போஸ்டர் ஒன்று இன்று வெளியாகியுள்ளது.


 அஜீத்

அஜீத்

போஸ்டரில் அஜீத் செம மாஸாக இருக்கிறார், வேற லெவல், மெர்சல் என தல ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருப்போம்.


 பிறந்தநாள்

பிறந்தநாள்

தல பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட அவரின் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். அஜீத் தனது திருமண நாளை போன்று பிறந்தநாள் அன்றும் படப்பிடிப்பில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


 தொப்பை

தொப்பை

அஜீத்துக்கு தொப்பை போட்டுவிட்டது என்று கிண்டல் செய்தவர்கள் கூட மிரண்டு போகும்படி விவேகம் படத்தில் அவர் சிக்ஸ் பேக் வைத்து மிரட்டியுள்ளார்.


English summary
A poster of Ajith starrer vivegam has got released and gone viral on social media a day before his birthday.
Please Wait while comments are loading...