»   »  ரஜினியை கேலி செய்கிறதா பவர் ஸ்டார் நடித்த படம்? புதிய சர்ச்சை

ரஜினியை கேலி செய்கிறதா பவர் ஸ்டார் நடித்த படம்? புதிய சர்ச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த்தை கேலி செய்யும் வகையில் பவர் ஸ்டார் சீனிவாசனை வைத்து, 'அட்ரா மச்சான் விசிலு' என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைவண்ணன் இயக்கத்தில், ரகுநந்தன் இசையில் தயாராகியுள்ள திரைப்படம், அட்ரா மச்சான் விசிலு. மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கமுத்து, சென்ராயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

A new Tamil film create controversy over Rajini

படத்தின் பாடல்களுக்கான உரிமையை ஈராஸ் நிறுவனத்தினர் வாங்கியுள்ளனர். ஏப்ரல் 14ல் படம் திரைக்கு வர உள்ளது. கடந்த ஆண்டு, லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடுகேட்ட விநியோகஸ்தர்கள் இணைந்து புதுப்படம் தயாரிக்கின்றனர். ‘லிங்கா' பட சர்ச்சையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக செய்திகள் பரவின. அதுதான் இந்த படம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியை கேலி செய்யவில்லை என பவர் ஸ்டார் சீனிவாசன் விளக்கம் தந்துள்ளபோதிலும், அதன் கதையும், படத்தில் இடம்பெறும் பாடல்களும் சின்ன குழந்தைகளுக்கு கூட ரஜினியை குறிவைத்து எடுக்கப்பட்ட படம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.

A new Tamil film create controversy over Rajini

தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் நட்சத்திரத்திற்கு திடீரென ஒரு படம் தோல்வி அடைகிறது. அந்த படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தாரா என்பதுதான் படத்தின் கதையாம்.

ரஜினியின் பிரபல பாடலான வந்தேன்டா பால்காரன் பாடல் வந்தேன்டா பவர்காரன் என மாற்றப்பட்டு இந்த படத்தில் இடம் பெறுகிறதாம். இதுபோதாதா சர்ச்சைக்கு. இந்த படத்தில் தனது பிசியான ஷெடியூலுக்கு நடுவே, ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.

English summary
A new Tamil film create controversy as it is deal with Rajiikanth's Linga film issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil