»   »  மீள முடியாத துக்க இரவு!

மீள முடியாத துக்க இரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- வெங்கட்

இந்த இரவு எங்கள் தமிழ் திரை உலகில் பலருக்கும் நித்திரை வராத இரவு ... நேற்றைய சிந்தனைகளில் முழுகும் இரவு .... சித்தாந்த வேதாந்த கர்ம தர்ம சிந்தனைகள் முட்டி மோதிக் கொள்ளும் இரவு...

இளையராஜா, ஞானி என்ற நிலை எல்லாம் இன்றி மறுக்க முடியாமல் மறக்க முடியாமல் கலங்கி இருக்கும் இரவு

கதாசிரியர் செல்வராஜ் 'அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் கீதம்...' என தன்னை தானே ஆற்றிக்கொள்ள முயற்சிக்கும் இரவு..

A painful night for Tamil Cinema

கங்கை அமரன் கலங்கி கலங்கி கதறி அழுதாலும் ஆறாத துக்கத்தை அசை போட்டு அசை போட்டு ஜீரணிக்க போராடும் இரவு...

பாரதிராஜா நிறம் மாறாத பூவாக நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த பஞ்சு அண்ணனின் நினைவோடு புலம்பி புலம்பி பிதற்றித் தள்ளும் இரவு..

A painful night for Tamil Cinema

கண்ணதாசன் குடும்பத்தார் மீண்டும் ஒரு முறை கவிஞரை இழந்த சோகம் தாக்கியது போல துவண்டு போகும் முடியாத விடியாத இரவு

பாலச்சந்தர் இல்லாமல் பாதி பலம் இழந்த ரஜினிகாந்துக்கோ அஸ்திவாரத்தில் விழுந்த இரண்டாவது அடியாக வலிக்கின்ற இரவு..

A painful night for Tamil Cinema

கமலஹாசனுக்கு இன்றுதான் உண்மையில் உடனடியாக ஓடி வராத அளவுக்கு மனதில் அடிபட்ட மாயங்கள் காயங்கள் நிறைந்த இரவு..

A painful night for Tamil Cinema

இப்படி சென்னை நகரத்திலும் நகரத்தார் சமூகத்திலும் பலரையும் பாதித்த பஞ்சு அருணாச்சலம் அவர்களே நீங்கள் எங்கும் செல்ல முடியாது

எங்களுடன் இருங்கள் ... நாங்கள் எப்போதும் உங்களுடந்தான்!

English summary
Film personality Venkat Subha says that that was a painful night for Kollywood due to the loss of Panchu Arunachalam,
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil