»   »  'இது யாரோட இந்தியா'.. வைரமுத்துவின் அணுகுண்டு கவிதை: அருமை அய்யா வணங்குகிறேன்'

'இது யாரோட இந்தியா'.. வைரமுத்துவின் அணுகுண்டு கவிதை: அருமை அய்யா வணங்குகிறேன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

-இப்படி ஒரு அறிமுகத்தோடு வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் கடந்த இரு தினங்களாக ஒரு கவிதை வலம் வருகிறது. படித்தாலே தெரிந்துவிடும் இது வைரமுத்துவின் வரிகளல்ல என்று. ஆனாலும் அவர் பெயரைப் பயன்படுத்தியதால், கவிதை பரபரப்பாகிவிட்டது.

இதோ அந்த வரிகள்...

வி ஐ பி களுக்கே இந்தியா...

பாவனா -வுக்கு
பாவாடை கிழிந்தால்
பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது

A political poem in the name of Vairamuthu

நந்தினி
ஹாசினி -களுக்கு
கருவறுக்கப்பட்டாலும்
அது கிணற்றுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது...

அம்பாணி, அதாணி
மல்லையா கடன் வாங்கினால்
அது தள்ளுபடி செய்யப்படுகிறது
இராமையா
மூக்கையா இராமசாமி -கள்
கடன் வாங்கினால்
தடியடி நடத்தி வசூலிக்கப்படுகிறது..

அரசியல்வாதிகள்
ஆற்றுமணலைக் கொள்ளையடித்தால்
சுங்கச் சாவடிகள் சுதந்திரமாக திறக்கப்படுகின்றன...
அன்றாடங் காய்சிகள்
மாட்டு வண்டியில்
மணல் எடுத்தால்
மாட்டு வண்டிகள் சூறையாடப்படுகின்றன...

கல்வியை தொழிலாக்கி
அதை காசுக்கு விற்று
பணம் பார்க்கும் கபோதிகளுக்கு
கல்வி தந்தையென பட்டம் அளிக்கப்படுகிறது
தேர்விலே
பக்கத்தில் இருப்பவனை பார்த்து
காப்பி அடித்தால் மாணவனுக்கு
மூன்றாண்டு தேர்வெழுத தடைவிதிக்கிறது..!

போலி நாயகனுக்கும்
அரசியல்வாதிகளுக்கும்
சட்டத்தில் பல விதிவிலக்குகள்
சாமானியனுக்கோ சட்டம்
தன் கடமையை செய்கிறது..!

இயற்கையை அழிப்பவன்
இறைவனென போற்றப்படுகிறான்
இயற்கையை காக்க போராடுபவன்
தேசதுரோகியென தூற்றப்படுகிறான் .
ஆக இது யாரோட இந்தியா..
இதுதான் இந்தியாவெனில்
யாருக்கு வேணும் இந்த இந்தியா..?

English summary
This is a poem circulated in social networks virally in the name of Vairamuthu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil