»   »  எங்க போனாலும் அதையே கேட்டு கடுப்பேத்துறாங்களே: குமுறும் தமன்னா

எங்க போனாலும் அதையே கேட்டு கடுப்பேத்துறாங்களே: குமுறும் தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்கு போனாலும் தமன்னாவிடம் ஒரேயாரு கேள்வியை கேட்டு கடுப்பேற்றுகிறார்களாம்.

பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூலித்துள்ளது. ரூ. 1000 கோடி கிளப்பை துவங்கி வைத்துள்ள பிரபாஸை பார்த்து பாலிவுட்டின் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான் எல்லாம் மிரண்டு போயுள்ளார்கள்.

A question irritates Tamanna

இந்தி பாக்ஸ் ஆபீஸிலும் பாகுபலி 2 கான்களின் படங்களை விட அதிக வரவேற்பை பெற்றுள்ளது தான் பாலிவுட்காரர்களை நடுங்க வைத்துள்ளது. பாகுபலி 2 வெற்றியால் ஒட்டு மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது.

பாகுபலியை விட பாகுபலி 2 படத்தில் தனக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தமன்னா பேட்டி அளித்திருந்தார். ஆனால் படத்தில் அவர் பெயருக்கு வந்து போயுள்ளார். வசனங்களும் கிடையாது.

அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாம். இந்நிலையில் அவர் எங்கு சென்றாலும் என்ன தமன்னா உங்க நிலை இப்படி ஆகிடுச்சே என்று ஆளாளுக்கு கேட்டு கடுப்பேற்றுகிறார்களாம்.

English summary
Tamanna is being asked about Rajamouli deleting her scenes in Baahubali 2. This question is reportedly irritating her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil