For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  களம் இறங்குவாரா... ஓடி ஒளியப் போகிறாரா? கமல் ஹாஸனுக்கு ஒரு கேள்வி!

  By Shankar
  |

  தமிழக அரசியல் களம் வரலாற்றில் எப்போதும் இல்லாத விசித்திரமான சூழலில் சென்னை ஆர்கே நகர் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

  இடைத் தேர்தல்கள் ஆளும் கட்சிக்கு மக்கள் ஆதரவு எப்படி என்பதை உரசிப் பார்க்கும் நிகழ்வாகவே இருக்கும்.

  A question to Kamal Hassan

  ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக பன்னீர் தனிக் குடித்தனம் தொடங்கினார். தன்னை முதல்வராக பாரதிய ஜனதா தொடர வைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த பன்னீரை கை கழுவி தன் சுயரூபம் காட்டிவிட்டார் மோடி. எடப்பாடியுடன் இணக்கமாகி விட்டது அவரது அரசு.

  ஆட்சி அதிகாரத்தை சசிகலா தரப்பு தக்க வைத்து கொள்ள கூவத்தூரில் சட்ட மன்ற உறுப்பிகளை கூட்டமாக அடைத்து வைத்தது. இதுபற்றி அரசியல் கட்சிகள் சம்பிரதாயமான அறிக்கைகள் கொடுத்து தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன.

  ஜல்லி கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன் அடுத்தடுத்து தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் பற்றி அனல் தெறிக்கும் கருத்துக்களை பதிவு செய்தார். ராஜினாமா செய்யும் வரை கூட்டமாக கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக இருந்து விட்டு புனிதர் வேடம் போடும் பணிவு பன்னீர் செல்வத்தை இளைஞர், மாணவர், மக்கள் மத்தியில் கதாநாயகனாக, ஆபத்பாந்தவனாக என்ற பிம்பம் உருவாக தொடங்கிய போது அதனை உறுதிப் படுத்தவும், வலிமைப்படுத்தவும் கமல்ஹாசன் ட் விட்டர் பதிவுகள் உதவின.

  கூவத்தூர் கும்மாளங்களுக்கு எதிராக கமல் தெரிவித்த கண்டன பதிவுகள் பன்னீர் செல்வத்துக்கு பலம் சேர்த்தது. சசிகலா ஜெயிலுக்கு போனது, எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக வழி வகுத்தது, மன்னார்குடி குடும்பத்தையும், அதிமுகவையும் வறுத்தெடுத் கமலுக்கு எதிர் நடவடிக்கையை நேரடியாக எடுக்காமல், புதுக்கோட்டையில் அவரது ரசிகர்கள் மீது வழக்கு பதிவு - கைது நடவடிக்கை என கமலை மிரட்ட தொடங்கியது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைந்த அதிமுக அரசு.

  கமல் வார்த்தைகளில் வெடித்தார். தனது நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டம், சட்ட ஆலோசனை என அடுத்தடுத்து செயல்பாடுகளில் கவனம் செலுத்த தமிழக அரசியல் களம் பரபரப்பானது. தனிக் கட்சி, அரசியல் பிரவேசம். ஆர் கே நகர் இடைத் தேர்தல் பங்கேற்பு என ஏதோ ஒரு வடிவத்தில் கமல் களம் இறங்குவார் என அவரது ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். கமலோ இது வழக்கமான கூட்டம் என்றார்.

  எடப்பாடி பழனிச்சாமி அரசு கலைக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் தங்களை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று புது அரசியல் பேசத் தொடங்கினார். தமிழக அரசியல் நிகழ்வுகளில் எதிர்கட்சி தலைவர் கருத்து, அறிக்கைகளைக் காட்டிலும் கமல்ஹாசன் கருத்துகள், பேட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

  சினிமா வாழ்க்கையில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இடத்தை யாராலும் நெருங்க முடியாமல் அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். இதில் இனியும் கதாநாயகனாக தன் இடத்தை தக்க வைக்க தன் வயது இடம் தராது என்பதை கமல் உணர்ந்ததன் விளைவு, அரசியல் களத்தில் நாயகன் வேடம் தரிக்கலாமா என்ற ஆசை வந்திருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

  அரசியல் தூய்மைப் படுத்த வேண்டும் என தொடர் விவாதம் செய்து வரும் கமல் தனக்கு இருக்கும் பாப்புலாரிட்டி, அரசியல் அறிவை ஆர் கே நகர் இடைத் தேர்தலில் காட்டலாமே. 'அட அட்லீஸ், அவர் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்றாலும் அவர் பிரதிநிதியை நிறுத்தி தமிழகத்தில் தூய்மையான அரசியல் துளிர் விடச் செய்ய ஒரு தொடக்கத்தை ஏற்படுத்துவாரா கமல் ஹாசன்?' என அரசியல் களத்தில் கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.

  கேள்வியின் நாயகனாகவே வண்டி ஓட்டிக் கொண்டிருக்காமல், களம் காணும் கதாநாயகனாக தன்னை உறுதிப்படுத்த போகிறாரா? இல்லை வழக்கம் போல ஓடி ஒளியப் போகிறாரா கமல் ஹாசன் என்பதே தமிழக மக்கள் கேள்வி.

  - ராமானுஜம்

  English summary
  Will Kamal Hassan jump in to politics through RK Nagar by election? Here is an analysis.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X