»   »  'குட்டிப்புயலே...' - ட்விட்டரில் குவியும் வாழ்த்து

'குட்டிப்புயலே...' - ட்விட்டரில் குவியும் வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த 20-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற 'மெர்சல்' பாடல் வெளியீட்டு விழாவில் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் கான்செர்ட்டும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் கலந்து கொண்டார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'மெர்சல்' விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டார்.

ரசிகர்கள் வாழ்த்து :

ரசிகர்கள் வாழ்த்து :

பவ்யமாகப் பார்த்தபடி இருக்கும் அவரது புகைப்படத்திற்கு ரஹ்மான் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 'குட்டிப் புயல்', 'குட்டி இசைப்புயல்' என அமீனுக்குப் பல பட்டங்களையும் சூட்டியுள்ளனர்.

ரஹ்மானின் கலர் ஜெராக்ஸ் :

அமீனை ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெராக்ஸ் எனவும் புகழ்ந்துள்ளனர். இங்கே ஒருவர் எப்படி வர்ணித்திருக்கிறார் எனப் பாருங்கள்...

குட்டி இசைப்புயல் :

குட்டி இசைப்புயல் :

ஏ ஆர் அமீன் தனது ஆறு வயது முதலே தனது தந்தை ரஹ்மானின் சினிமா பாடல்களில் பாடி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்தில் தனது தந்தையின் இசையில் ஒரு பாடலைப் பாடினார். அவர் பாடிய 'மௌ லா வா சலீம்...' பாடல் பலத்த பாரட்டைப் பெற்றது.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? :

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? :

14 வயதாகும் அமீன் இப்போதே வளர்ந்துவரும் பாடகருக்கான மிர்ச்சி இசை விருது, சிறந்த பின்னணிப் பாடகருக்கான விகடன் விருது என இரு பெரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவரும் தனது அப்பாவைப் போல இரண்டு ஆஸ்கர் விருதுகளை இரண்டு கைகளிலும் ஏந்தியபடி 'எல்லாப் புகழும் இறைவனுக்கே...' எனச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜெய் ஹோ!

English summary
A R Ameen who is son of music director A R Rahman uploaded a mersal audio launch photo in twitter. His fans are greeting him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil