»   »  வீரசிவாஜி டீசர்... வெளியிட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

வீரசிவாஜி டீசர்... வெளியிட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் வீரசிவாஜி படத்தைத் தயாரித்து வருகிறார்.


இந்தப் படம் தவிர விஷால், வடிவேலு, தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார். இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரு சேர நடந்து வருகிறது.


A R Murugadass released Veera Sivaji teaser

வீரசிவாஜி படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக ஷாம்லி நடிக்கிறார்.


இந்தப் படம் குறித்து இயக்குநர் கணேஷ் விநாயக் கூறுகையில், "படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்தப் படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் வெளியிடக் கேட்டோம். டீசரை பார்த்த அவர் உடனே 'அருமையாக உள்ளது. நான் கண்டிப்பாக வெளியிடுகிறேன்' என்று வெளியிட்டார். குழுவினரையும் பாராட்டினார். அவர் பாராட்டியது போல படம் நிச்சயம் வெற்றியடையும்.


A R Murugadass released Veera Sivaji teaser

சமீபத்தில் இந்த படத்திற்காக யுகபாரதி எழுதி டி.இமான் இசையமைத்து ஸ்ரேயா கோஷல் - ஸ்ரீராம் பார்த்தசாரதி குரல்களில் உருவான 'அடடா அடடா என் தேவதையே இது நாள் வரையில் என் விழிகள் தேடலையே...' என்ற பாடல் காட்சி தினேஷ் மாஸ்டர் நடன அமைப்பில், எம்.சுகுமார் ஒளிப்பதிவில், விக்ரம் பிரபு - ஷாம்லி நடனமாட ஜார்ஜியா என்ற ஊரில் கஸ்பகி என்ற இடத்தில் படமாக்கினோம். அந்த பாடல் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது," என்றார்.

English summary
Director A R Murugadass has released the teaser of Vikram Prabhu starring Veera Sivaji.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil