»   »  பாலிவுட்டைத் தொடர்ந்து டோலிவுட் செல்கிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

பாலிவுட்டைத் தொடர்ந்து டோலிவுட் செல்கிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இணைந்து தனது அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழில் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி ஹிந்தியில் கஜினி போன்ற மாபெரும் ஹிட் படங்களைக் கொடுத்த முருகதாஸ் மகேஷ்பாபு மூலமாக தற்போது தெலுங்கு தேசத்திலும் கால்தடம் பதிக்கவிருக்கிறார்.

A.R.Murugadoss with Maheshbabu?

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் 2 மொழிகளிலும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்சமயம் சோனாக்ஸி சின்ஹா நடிப்பில் மௌனகுரு படத்தின் இந்தி ரீமேக்கான அகிரா, தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் ஒரு படம் என்பதே ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்தடுத்தத் திட்டம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மகேஷ் பாபு தற்போது நடித்துவரும் 'பிரம்மோத்சவம் ' பட வேலைகள் முடிவடைந்தவுடன், இந்தப்படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தை ஆ.பி.சௌத்ரி மற்றும் எ.வி.பிரசாத் இருவரும் இணைந்துத் தயாரிக்கவிருக்கிறார்களாம்.

தனி ஒருவன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை சல்மானை வைத்து முருகதாஸ் இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Latest Buzz in Tollywood Telugu Superstar Mahesh Babu will be teaming up with A.R.Murugadoss after the completion of 'Brahmotsavam' and this Telugu - Tamil bilingual will be jointly produced by R.B.Choudary and N.V.Prasad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil