»   »  எனக்கு இன்னொரு பேர் இருக்கு: ஜி.வி.பிரகாஷ் டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு: ஜி.வி.பிரகாஷ் டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் டீசரை ஏ.ஆர்.ரகுமான் வருகின்ற 28 ம் தேதி வெளியிடுகிறார்.

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, கருணாஸ், நிரோஷா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'.


A.R.Rahman Launch Enakku Innoru Per Irukku Teaser

'டார்லிங்' வெற்றிக்குப்பின் இயக்குநர் சாம் ஆண்டன்-ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் இப்படத்தை, லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.


'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' வெற்றிக்குப்பின் ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி 2 வது முறையாக இப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.


இந்நிலையில் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் என ரஜினியின் 'பாட்ஷா' படத்தை வைத்து ரசிகர்களைக் கவர்ந்த படக்குழு, டீசரிலும் ரசிகர்களைக் கவர திட்டமிட்டுள்ளனராம்.


அதன்படி இப்படத்தின் டீசரில் அஜீத், விஜய் குறித்த சில விஷயங்களை இணைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பர்ஸ்ட் லுக் போலவே டீசரும் பலத்த வரவேற்பைப் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இப்படத்தின் டீசரை வருகின்ற 28ம் தேதி மாலை 5 மணியளவில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுகிறார். மேற்சொன்ன காரணங்களால் தற்போது ரஜினி, அஜீத், விஜய் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் இப்படத்திற்கு கிடைத்துள்ளது.


இதனால் #enakkuinnoruperuirukku, #ARRahman, #GVPrakash போன்ற ஹெஷ்டேக்குகள் தேசியளவில் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.

English summary
A.R.Rahman to launch the teaser of G.V.Prakash 's 'Enakku Innoru Per Irukku' on April 28th at 5 pm.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil