»   »  டாம் குரூஸ் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை?

டாம் குரூஸ் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்லம்டாக் மில்லியனர்ஸ்' என்ற படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கோலிவுட், பாலிவுட் படங்களுக்கு மட்டுமின்றி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு முக்கிய ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டாம்குரூஸ் நடிக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மம்மி

மம்மி

1999ல் வெளியான ‘மம்மி' திரைப்படம் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமாக உலகையே ஆட்டிப் படைத்தது. எகிப்து தேசத்தின் சவங்களை பதப்படுத்தி வைக்கும் இடத்தை ஆராய்ச்சி செய்யப்போகும் குழுவால் உயிர்த்தெழும் மம்மியின் அட்டகாசமும் அதை எதிர்த்து போராடும் நாயகனின் வீரமுமே கதையின் அம்சமாகும்.

தி மம்மி ரீபூட்

தி மம்மி ரீபூட்

பிரண்டன் பிராசர் நடிப்பிலே அந்த படம் மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. மூன்று படங்களையும் இயக்கியவர் ஸ்டீபன் சோமர்ஸ் ஆவார். தற்போது 'தி மம்மி ரீபூட்' என்ற படத்தை இயக்குனர் அலெக்ஸ் குர்ட்ஸ்மேன் இயக்கவுள்ளார்.

டாம்குரூஸ்

டாம்குரூஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம்குரூஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் டாம்குரூஸ் வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

English summary
The hot topic today among Hollywood film buffs right now is about the fact that Tom Cruise would be teaming up with Alex Kurtzman for The Mummy reboot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil