»   »  இசையால் டெல்லிவாசிகளை கட்டிப் போட்ட ஏ.ஆர்.ரகுமான்

இசையால் டெல்லிவாசிகளை கட்டிப் போட்ட ஏ.ஆர்.ரகுமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனது அருமையான பாடல்கள் மற்றும் இசையால் டெல்லிவாசிகளின் மனதைத் திருடியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

என்ஹெச்7 வீக்என்டர் என்பது பல்வேறு நகரங்களில் நடைபெறும் ஒரு இசை நிகழ்ச்சி ஆகும். கடந்த 2010 ம் ஆண்டிலிருந்து இந்த இசை நிகழ்ச்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

A.R.Rahman in NH7 Weekender

இந்நிலையில் இந்த வருட இசைநிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.

தில் சே மற்றும் ஓ ஹம்டும் சுனியோ ரே போன்ற போன்ற காதல் பாடல்களின் மூலம் நிரம்பி வழிந்த அந்தக் கூட்டத்தில் பல்வேறு இதயங்களை ரகுமான் தன் வசப்படுத்தி விட்டார்.

சர்வதேச டிஜே மார்க் ரான்சன் மற்றும் அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற மெகதீத்( இசைக்குழுவினர்) ஆகியோர் ரகுமானுக்கு பக்கபலமாக விளங்கி இசை மற்றும் பாடல்களில் அவருக்கு உதவிகள் செய்தனர்.

"இந்த இசை நிகழ்ச்சிக்கு நான் இங்கு என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்தேன். ஏனெனில் இந்தத் தலைமுறையின் இசையார்வம் முற்றிலும் மாறிவிட்டது.

ஆனால் எனது இசையை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நினைத்தேன். கடவுள் ஆசீர்வாதம் செய்வார்" இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டு இருந்தார். அதே போன்று அவர் மேடையில் தோன்றியபோது இளைய தலைமுறையினர் அவருக்கு மிகுந்த வரவேற்பு அளித்தனர்.

தற்போது இவரின் இசையில் வெளியான தமாஷா (பாலிவுட்) படம் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக 2011 ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ராக் ஸ்டார் படத்தில் இம்தியாஸ் அலி மற்றும் ரன்பீருடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

English summary
Music Composer A.R.Rahman Participate in 2015 NH7Weekender.He Wrote in Twitter "Delhi, the weather seems perfect...excited to see you all at NH7Weekender".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil