»   »  உத்திரப்பிரதேச மாநிலத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்

உத்திரப்பிரதேச மாநிலத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சுத்தமான மற்றும் பசுமையான உத்திரப்பிரதேசம் என்ற தலைப்பில் வருகின்ற 21ம் தேதிசமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பிறந்த நாள் தினத்தில் பாடவிருக்கிறார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது 76 வது பிறந்தநாளை நவம்பர் 22ம் தேதி கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது மகனும் உத்திரப்பிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

A.R.Rahman to Participate for Green Uttar Pradesh

அதில் ஒன்றாக சுத்தமான மற்றும் பசுமையான உத்திரப்பிரதேசம் என்ற தலைப்பில் இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியும், பாடலும் இடம்பெறுகின்றது.

தொடர்ந்து அதே தினத்தில் சுமார் 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் விழாவும் நடத்தப்படுகிறது. மேலும் 50,௦௦௦ க்கும் அதிகமான பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்களும், பிரபல நடிகர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரகுமானின் பாடல்கள் மற்றும் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று அகிலேஷ் யாதவ் நம்புகிறார்.

முலாயம் சிங் யாதவின் பிறந்தநாள் 22ம் தேதியில் தான் என்றாலும் மேற்சொன்ன நிகழ்ச்சிகள் யாவும் 21 ம் தேதியன்று நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
November 21st Samajwadi Party chief Mulayam Singh Yadav Celebrate his 76th birthday, in this party Music Composer A.R.Rahman to Sing for Clean and Green UP.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil