twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி திணிப்புக்கு எதிராக தில்லாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்…மீண்டும் சரியான பதிலடி!

    |

    சென்னை : ஆங்கில மொழி பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு இடையேயான தடைகளை உடைக்கும் என்று நெக்ஷா இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஷ்மான் பேசியுள்ளார்.

    தமிழ் சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களில் சிலர், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

     எங்க குடும்பம் அதிர்ஷ்டம் படைத்த குடும்பம்... நடிகர் விஜயகுமார் பெருமிதம்! எங்க குடும்பம் அதிர்ஷ்டம் படைத்த குடும்பம்... நடிகர் விஜயகுமார் பெருமிதம்!

    தமிழணங்கு

    தமிழணங்கு

    அமீத்ஷாவின் கருத்துக்கு பலரும், கருத்து தெரிவித்து வந்த நிலையில், ஏஆர் ரஹ்மான், 'தமிழணங்கு' என்று தமிழ்த் தாய் கையில் வேலுடன் ஆக்ரோஷமாக காட்சி தரும் ஓவியத்தை பகிர்ந்து இருந்தார். அந்த வேலின் முனையில் தமிழின் சிறப்பு எழுத்தான "ழ" இடம் பெற்றுள்ளது. தமிழ்த் தாயின் கீழே, பாரதிதாசன் எழுதிய "இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு உரிமைச்செம் பயிருக்கு வேர்" என்ற பாடல் வரி இடம் பெற்று இருந்தது. ஏ.ஆர் ரஹ்மானின் இந்த ட்வீட் மிகவும் பரப்பாக பேசப்பட்டது.

    இந்தி திணிப்பு

    இந்தி திணிப்பு

    இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் டெல்லியில் நடைபெற்ற நெக்ஸா மியூசிக் இரண்டாவது சீசனின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆங்கில மொழி பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு இடையேயான தடைகளை உடைக்கும் ஆயுதமாக உள்ளது என்று இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்துள்ளார்.

    இசைஉலகம் சிறப்பாக உள்ளது

    இசைஉலகம் சிறப்பாக உள்ளது

    இந்தியாவின் பிராந்திய மொழிகளில் நெக்ஸா மியூசிக் போன்று மற்றுமொரு அடையாள கொண்டு வர விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, ​ இந்தியாவில், இசை திரையுலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். எங்கள் கலைஞர்களை உலகளவில் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் அவர்கள் கிராமி விருதுகளுக்கு போட்டியிட முடியும் மற்றும் சர்வதேச தளங்களில் இருக்க முடியும் என்று அவர் கூறினார்.

    ஆதரவு

    ஆதரவு

    ஏ.ஆர். ரஹ்மான் இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்துள்ளது தற்போது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக உள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதேபோல மேலும் பல பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வருகின்றனர்.

    English summary
    A.R. Rahman stated that the English language helps to break down obstacles
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X