Just In
- 26 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
Don't Miss!
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- News
விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா?
- Sports
அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது?
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதல் நாளே இப்படி.. தொடரும் பகை.. இந்தியன் 2 விபத்துக்கு இடையில் நேற்று நடந்த வேறு ஒரு சண்டை!
சென்னை: நேற்று இந்தியன் 2 விபத்து நடந்து கோலிவுட் பெரிய பரபரப்பான சூழ்நிலையில் இருந்த அதே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையில் கடுமையான சண்டை நடந்துள்ளது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சண்டை
நேற்று கோலிவுட் இவ்வளவு பரபரப்பாக இருந்த அதே நேரத்தில்தான் வேறு ஒரு முக்கியமான விஷயமும் நடந்தது.நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இயக்குனர் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்றுதான் தொடங்கியது.

இடையில் என்ன
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் படத்தின் ஷூட்டிங் நேற்று காலை பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் சிம்புவின் மாநாடு பட ஷூட்டிங்கிற்கு நேற்று முக்கிய விருந்தினர்கள் வந்திருந்தனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த விழாவிற்கு வந்து இருந்தார். இந்த படம் தொடர்பான டிவிட்கள் பல நேற்று இணையத்தில் பெரிய அளவில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன
ஆனால் இந்த ட்ரெண்டை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று மாலையே தனுஷ் நடிக்கும் டி40 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி டிரெண்டானது. சரியாக மாநாடு புகழை மறைக்கும் வகையில் இந்த போஸ்டர் வெளியானது.

மாநாடு எப்படி
அதேபோல் மாநாடு குறித்த பேச்சும் டிவிட்டரில் நின்று போனது. இதனால் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்கள் இடையே பெரிய அளவில் நேற்று டிவிட்டரில் சண்டை வந்தது. மாறி மாறி இரண்டு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டார்கள். சிம்புவின் படப்பிடிப்பு டிரெண்டை காலி செய்ய வேண்டும் என்றுதான் தனுஷ் தரப்பு இப்படி செய்கிறது, என்று சிம்பு ரசிகர்கள் புகார் வைத்து வந்தனர்.

தனுஷ்
சிம்புவிற்கு தனுஷுக்கும் இடையில் பல வருடங்களாக சொல்லப்படாத நிழல் யுத்தம் நிகழ்ந்து வந்தது. அந்த யுத்தம் இடையில் கொஞ்சம் இல்லாமல் இருந்தது. நேற்று நடந்த பிரச்சனைக்கு பின் அது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது என்று கூறுகிறார்கள். நேற்று இந்தியன் 2 விபத்து இடையிலும் இந்த சண்டை இன்னொரு பக்கம் தீவிரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.