twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திறமையால் திரையில் ஜெயித்த உதயநிதி ஸ்டாலின்..திரைப்பயணம் ஒரு ரவுண்டப்!

    |

    சென்னை : தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர், எம்.எல்.ஏ, இன்று அமைச்சர் என பன்முக திறமையுடன் ஜொலிக்கும் உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணம் குறித்து ஒரு ஸ்பெஷல் ரவுண்டப்பை பார்க்கலாமா?

    கலைஞர் கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் 1977ம் ஆண்டு நவம்பர் 27ந் தேதி பிறந்தார்.

    லயோலா கல்லூரியில் நடித்த உதயநிதி, விஜய், த்ரிஷா நடித்த குருவி திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன்பின்பு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான விண்ணை தாண்டி வருவாயா படத்தை விநியோகம் செய்து விநியோகஸ்தராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

    உதயநிதி நடிகரானார்

    உதயநிதி நடிகரானார்

    கலைக்குடும்பத்தில் பிறந்த கலைமகனுக்கு நடிப்பின் மீது ஆசைவராமல் இருக்குமா என்ன. எம் ராஜேஷ் தயாரித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் உதயநிதி. காதல், நகைச்சுவை திரைப்படமான இப்படம் இன்று வரை அனைவருக்கும் பிடித்த திரைப்படமாகவே உள்ளது. குறிப்பாக சந்தானம், உதயநிதியின் காமினேஷன் வேறலெவல் என்று சொல்லும் அளவுக்கு முதல் படமே சிறப்பாக இருந்தது.

    நயன்தாராவுடன் நடித்தார்

    நயன்தாராவுடன் நடித்தார்

    முதல் படத்தின் வெற்றி கொடுத்த உத்வேகத்துடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து நயன்தாராவுடன் நண்பேன்டா,எமி ஜாக்சனுடன் கெத்து போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இந்த படங்கள் ஓரளவு பெயர் சொல்லும் படமாகவே இருந்தன.

    வழக்கறிஞராக

    வழக்கறிஞராக

    இதையடுத்து, அதிரடியான ஒரு கதையை கையில் எடுத்துக்கொண்டு மனிதன் படத்தில் நியாயத்திற்காக போராடும் வழக்கறிஞராக நடித்தார். இந்த திரைப்படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் சும்மா மிரட்டலாக இருந்தன. வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இத்திரைப்படம் உதயநிதிக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததோடு மட்டுமில்லாமல் வசூலையும் வாரிக்குவித்தது.

    எதார்த்தமான நடிப்பு

    எதார்த்தமான நடிப்பு

    பல வெற்றிப்படங்களை கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மிஸ்கின் இயக்கத்தில் உருவான சைக்கோ படத்தில் பார்வை இழந்தவராக நடித்திருந்தார். பார்வை இல்லாத போதும் காதலிக்காக சைக்கோ கொலைகாரனை தேடும் ரோலில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவர் மனதையும் நினைத்து நினைத்து உருக வைத்து விட்டார் உதயநிதி.

    வித்தியாசமான கதை

    வித்தியாசமான கதை

    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் உதயநிதி நெஞ்சுக்கு நீதி,கலகதலைவன் என சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். தற்போது மாமன்னன் திரைப்படம் தயாராகி வருகிறது. மாரிசெல்வராஜ் இயக்கும் இப்படத்தில் உதயநிதி தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பகத் பாசில் நடித்துள்ளார்.

    குவியும் வாழ்த்து

    குவியும் வாழ்த்து

    சட்டசபை தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவான உதயநிதி, தொகுதி மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இதையடுத்து, உதயநிதி அமைச்சராக நியமிக்கப்பட்டால் தமிழக மக்கள் அனைவருக்கும் சேவையாற்றுவார் என்று சில அமைச்சர்கள் கூறியதை அடுத்து, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதை ஆளுநர் ஏற்றுக்கொண்டை அடுத்து இன்று கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. பலரும் உதயநிதி ஸ்டாலுனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Producer, actor and politician Udhayanidhi Stalin's cinima journey special round up
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X