For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தியேட்டர் உரிமையாளர்கள் செய்த பலே மோசடி... ரூ 180 கோடி ஊழல் அம்பலம்!

  By Shankar
  |

  சமூகத்தில் பிறருக்கு முன் உதாரணமாகவும், வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டிய திரையுலக புள்ளிகள் சிலர், பணத்துக்காக தங்களை நம்பியிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களை வைத்து டிஜிட்டல் நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் வருமானம் பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது.

  இந்த விவரங்கள் அறிந்ததும், தங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று இவர்களை நம்பி வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  A scam for Rs 180 cr exposed in film industry

  படங்களை தியேட்டர்களில் திரையிட இனிமேல் நாங்கள் கட்டணம் செலுத்த மாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அறிவித்தபோது அது காமெடியாகப் பார்க்கப்பட்டது.

  அது சம்பந்தமாக விபரங்கள் படிபடியாக பொது வெளியில் விவாத பொருளாக மாறிய போது டிஜிட்டல் நிறுவனங்களின் கைப்பாவைகளாக, ஏஜெண்டுகளாக, தரகர்களாக மாறி சிலர் பேசத் தொடங்கினார்கள்.

  "இதில் முதன்மையானவர் திருப்பூர் சுப்பிரமணி. கோவை ஏரியாவில் உள்ள 165 திரைகளில் 112 திரைகள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளது. டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கி பேசுவதில் இவருக்கு போட்டி யாரும் இல்லை," என்கிறார்கள் திரையுலகில் ஸ்ட்ரைக் ஆதரவாளர்கள். இதனை தமிழகத்தில் சிண்டிகேட் முறையில் தியேட்டர் நடத்தும் அனைவரும் வழிமொழிந்து வந்தனர்.

  தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிட நிறுவப்பட்ட புரஜெக்டர் விலை கொடுத்து வாங்கப்படவில்லை. எனவே அதற்கான வாடகை மற்றும் திரையிடும் சர்வீஸ் கட்டணம்தான் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் செலுத்தி வந்த VPF கட்டணம் என கியூப் நிறுவனம் அறிவித்து இருந்தது.

  திரையரங்கு நடத்துவதற்கு அடிப்படையாக சில வசதிகள் உரிமையாளரால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில் படம் காட்டும் கருவி முக்கியமானது. அப்போதுதான் அரசு உரிமம் வழங்கும்

  பிரிண்ட் காலத்தில் சொந்தமாக புரெஜெக்டர்கள் வைத்திருப்பதை பெருமைக்குரிய விஷயமாக தியேட்டர் உரிமையாளர்கள் கருதினர். அதனைக் கடைப்பிடித்தனர். இன்றைக்கும் பல திரையரங்குகளில் அந்த புரெஜக்டர் பராமரிக்கப்பட்டு யானை போன்று கம்பீரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  டிஜிட்டல் முறைக்கு தியேட்டர்கள் மாறியபோது படம் திரையிடப் பயன்படும் மிஷினை சொந்தமாக வைத்துக் கொள்ளவில்லை.

  அதனை டிஜிட்டல் கம்பெனிகள் வலியுறுத்தவில்லை. ஐந்து லட்சம் விலையுள்ள மிஷினுக்கு வாராவாரம் 13000, 14000 ரூபாய் என தயாரிப்பாளர்கள் பணம் கட்டியிருப்பதன் மூலம் ஒவ்வொரு தியேட்டரிலும் மிஷின் விலையை விட பன் மடங்கு பணம் கியூப் நிறுவனத்திற்கு போய் சேர்ந்து இருப்பதை புள்ளி விபரங்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

  இது பகல் கொள்ளை, திரையரங்குகளும், தயாரிப்பாளர்களும் ஏமாற்றப்பட்டு உள்ளனர் என விஷால் கூறிய போது நியாயங்கள் பேசும் திருப்பூர் சுப்பிரமணி கியூப்புக்கு ஆதரவு நிலை எடுத்தார்.

  தயாரிப்பாளர்களுக்கும் - திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பேச்சுவார்த்தை நடந்த போது கார்ப்பரேட் நிறுவனங்களான சத்யம், ஐநாக்ஸ், PVR, AGS இவர்கள் நடத்துகின்ற திரைகளில் இருப்பது சொந்த மிஷின்கள். இதே போன்று 242 திரைகளில் சொந்தமாக தியேட்டர் உரிமையாளர்கள் நிறுவி இருப்பது தெரிய வந்தது. இந்த திரைகளில் திரையிடப்படும் படங்களுக்கும் VP F கட்டணம் செலுத்தப்பட்ட தொகை கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 180 கோடி
  (242 x 15000=36,30,000 X 52 =18,87,60000 ஒரு வருட கணக்கு ) செலுத்தப்பட்டுள்ளது. இந்த பணம் இருந்தால் தமிழ்நாடு முழுவதும் தயாரிப்பாளர்கள் சங்க செலவில் அனைத்து தியேட்டர்களுக்கும் சொந்தமாக புரஜெக்டர் நிறுவ முடியும்.

  கியூப் நிறுவனம் சொந்தபுரஜெக்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் தயாரிப்பாளர் செலுத்தியVP Fதொகையை கொடுக்கவில்லை. சென்னை தியேட்டர்களுக்கும், தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு நிலை எடுத்துவருபவர்களுக்கு மட்டும் கடந்த பத்தாண்டுகளாக வழங்கி வந்தது வெட்ட வெளிச்சாமான பின் அதனை நியாயப்படுத்தும் வகையில் தியேட்டர் சங்க உரிமையாளர்கள் சங்க பொதுசெயலாளர் பன்னீர் பேசியுள்ள ஆடியோ திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சொந்தமாக புரஜெக்டர் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான தியேட்டர் உரிமையாளர்கள் கியூப் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் இதுவரை இல்லை. வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்கும் தலைவர்கள் எங்களை வைத்து தங்களை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியை எங்களுக்கு சொல்லித் தராமல் மறைத்ததை எந்த வகையில் நியாயம். இவர்களை நம்பி எப்படி போராடுவது என்ற அதிருப்தி குரல்கள் தமிழ்நாடு முழுவதும் எழுப்பப்பட்டு வருகிறது. இதனைச் சமாளிக்க இன்று சென்னையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  English summary
  There was a big scam around Rs 180 cr happened between digital service providers and Theater owners association, exposed during this ongoing cinema strike.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X