»   »  லிப் டூ லிப் காட்சி: ஜீவா ஹீரோயினுடன் டீல் போட்ட இயக்குனர்

லிப் டூ லிப் காட்சி: ஜீவா ஹீரோயினுடன் டீல் போட்ட இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரம்பமே அட்டகாசம் படத்தில் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க நடிகையுடன் ஒப்பந்தம் போட்டார்களாம்.

பாலிவுட் படங்களில் லிப் டூ லிப் காட்சி சர்வ சாதாரணமாகிவிட்டது. அதனால் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறினால் நடிகைகள் பதறுவது இல்லை.


தமிழ் சினிமாவில் இன்னும் அந்த நிலை வரவில்லை.


நடிகைகள்

நடிகைகள்

தமிழ் சினிமாவில் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறினால் நடிகைகளை விடுங்க நடிகர்கள் கூட மிரளுகிறார்கள், நெளிகிறார்கள். துணிந்து நடிக்கும் நடிகைகள் சிலர் தான்.


ஆரம்பமே அட்டகாசம்

ஆரம்பமே அட்டகாசம்

ரங்கா இயக்கத்தில் ‘லொள்ளு சபா' ஜீவா, சங்கீதா பட் ஜோடியாக நடித்துள்ள படம் ஆரம்பமே அட்டகாசம். லவ் பண்ணி தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஜீவாவை சொல்லி சொல்லி வளர்க்கிறார் தந்தை. காதலில் ஜீவா வெற்றி பெறுகிறாரா என்பதே கதை.


முத்தம்

முத்தம்

ஆரம்பமே அட்டகாசம் படத்தில் 3 இடங்களில் லிப் டூ லிப் காட்சிகள் உள்ளன. இதில் நடிக்க வேண்டும் என்று சங்கீதாவிடம் தெரிவித்த இயக்குனர் இதற்கென ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்து வாங்கியுள்ளார்.


ஏன்?

ஏன்?

லிப் டூ லிப் காட்சிகளில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டு பின்பு முடியாது என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்று முன்னெச்சரிக்கையாக இயக்குனர் ஒப்பந்தம் போட்டாராம். தெளிவாகத்தான்யா இருக்காரு.


English summary
Arambame attakasam director has made Sangeetha Bhatt sign an agreement to act in lip lock scenes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil