For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக்பாஸ் பிளாஷ்பேக்: முதல் சீசனில் அதிகம் கழுவி ஊற்றப்பட்ட பிரபலங்கள்.. ஒரு குட்டி ரவுண்ட் அப்!

  |

  சென்னை: பிக்பாஸ் முதல் சீசனில் அதிகம் விமர்சிக்கப்பட்ட பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து ஓர் பார்வை.

  ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 விஜய் டிவியில் விரைவில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க போகும் 16 போட்டியாளர்களின் தேர்வு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அவர்கள் அனைவரும் வரும் 18ஆம் தேதி முதல் குவாரண்டைனில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கும் என தெரிகிறது.

  என்ன சம்மு.. இப்படி இறங்கிட்டீங்க.. கருப்பு வெள்ளை புகைப்படத்தில், இன்னாம்மா ஹாட்டா இருக்காரு!

  ஆரவ் வின்னர்

  ஆரவ் வின்னர்

  இந்நிலையில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் அதிகம் விமர்சிக்கப்பட்ட பிரபலங்கள் குறித்து ஒரு குட்டி ரவுண்ட் அப். முதல் சீசனில் டைட்டில் வின்னர் ஆனவர் மாடலான ஆரவ். அந்த சீசனில் பாடலாசிரியர் சினேகன் ரன்னர் அப் ஆனார்.

  நடிகை ஜூலி

  நடிகை ஜூலி

  அதே நேரத்தில் முதல் சீசனில் பல பிரபலங்கள் அதிக விமர்சனத்துக்கு ஆளானார்கள். அதில் ரசிகர்களின் பெரும் கோபத்திற்கு ஆளானவர் நடிகை ஜூலி. வாயை திறந்தாலே பொய் என்று அவரை கடுமையாக திட்டித்தீர்த்தனர் நெட்டிசன்கள். இல்லாததையெல்லாம் சொல்லி அந்த சீசனில் ஓவியாவை மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் ஓரங்கட்ட காரணமாயிருந்தார்.

  கஞ்சா கறுப்பு

  கஞ்சா கறுப்பு

  அடுத்து கஞ்சா கறுப்பு.. வந்த ஒரு சில நாட்களிலேயே அவருடைய சுய ரூபம் தெரிந்துவிட்டது. சக போட்டியாளரான பரணியைப் பற்றி தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசி பிக்பாஸ் வீட்டுக்குள் பெரும் பிரளயத்தை உருவாக்கினார் கஞ்சா கறுப்பு. பரணி சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு செல்ல காரணமாயிருந்தவர் இந்த கஞ்சா கறுப்புதான் என சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள்.

  காயத்ரி ரகுராம்

  காயத்ரி ரகுராம்

  அடுத்து நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம். இவரும் ஜூலி சொல்வதையெல்லாம் நம்பி, ஓவியா மீது ஆரம்பம் முதலே தனது வன்மத்தை காட்டி வந்தார். மேலும் ஓவியாவை பார்த்து சேரி பிகேவிங் என்று கூறியதும் கெட்ட வார்த்தையால் பேசியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. காயத்ரி வீட்டிற்கு முன் பலரும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். புரோட்டின் பவுடர் விவகாரத்திலேயே பொய்யை சொன்ன காயத்ரிக்கு முதல் குறும்படத்தை போட்டு காட்டி முகத்திரையை கிழித்தார் கமல்.

  நடிகர் சக்தி

  நடிகர் சக்தி

  அடுத்து ஷக்தி.. முதல் சீசனில் அதிக விமர்சனத்துக்கு ஆளானவர்களில் நடிகர் ஷக்தியும் ஒருவர். எப்போதும் காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி என இருந்த ஷக்தி, மற்றவர்கள் சொன்னதை கண்மூடித்தனமாக நம்பினார். அடிக்கடி ட்ரிகர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் ட்ரிகர் ஷக்தி என்று அழைக்கப்பட்டார். ஒரு முறை ஓவியாவை அடிக்க பாய்ந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் அவரை திட்டி தீர்த்தனர்.

  நடிகை நமீதா

  நடிகை நமீதா

  அடுத்து நடிகை நமீதா இவரும் பிக்பாஸ் முதல் சீசனில் ரசிர்களின் கோபத்திற்கு ஆளானார். காயத்ரி ரகுராம், ஜூலி, ஷக்தி என குரூப் ஃபார்ம் செய்துக் கொண்டு ஓவியாவை ஓரங்கட்டியதில் இவருக்கும் பங்கு உண்டு. அதேபோல் ஓவியாவின் தாயார் புற்றுநோயால் இறந்ததை குறிப்பிட்டு கேன்சர் குடும்பம் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.

  பாடலாசிரியர் சினேகன்

  பாடலாசிரியர் சினேகன்

  அவரை தொடர்ந்து பாடலாசிரியர் சினேகன். பிக்பாஸ் முதல் சீசனுக்கு பிறகு சினேகன் என்றாலே கட்டிப்பிடிப்பார், அணைப்பார் என்றளவுக்கு ஆகிவிட்டது. மற்றவர்களுக்கு தனது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவிக்க கட்டிப்பிடி வைத்தியதை முதன்மையாக கொண்டிருந்தார். சினேகன். இதற்காக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.

  நடிகர் ஆரவ்

  நடிகர் ஆரவ்

  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவும் சில சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார். அதேபோல் ஓவியாவின் இடுப்பையும் கிள்ளினார் ஆரவ். இதையெல்லாம் செய்து விட்டு தனக்கு வெளியே காதலி இருக்கிறார் என கூறி ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார். இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.

  English summary
  A small flash back of Biggboss first season. Celebrities Who are all faced public angry in first season.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X