»   »  நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'

நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: நடிகை பூஜாவுக்கும் தொழில் அதிபர் பிரஷான் டேவிட் விதாகனுக்கும் கொழும்புவில் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாம்.

மாதவனின் ஜே ஜே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா. அஜீத்துடன் அட்டகாசம் படத்தில் நடித்தவர். ஆர்யா, மாதவனுக்கு ஜோடியாக நடித்த பூஜா சிங்கள மொழிப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளது.

தீபக்

தீபக்

பூஜாவுக்கும் மாடல் தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. ஆனால் தங்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்று கூறி அவர்கள் 2015ம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.

பிரஷான்

பிரஷான்

பூஜாவுக்கும் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் பிரஷான் டேவிட் விதாகனுக்கும் கொழும்புவில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பூஜா

பூஜா

பூஜாவுக்கும் தீபக்கிற்கும் தான் திருமணம் நடந்தது என்று முதலில் தவறான செய்திகள் வெளியாகின. உண்மையில் அவருக்கும் பிரஷானுக்கும் தான் திருமணம் நடந்துள்ளது.

புகைப்படம்

புகைப்படம்

பூஜா, பிரஷான் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பூஜா தங்க நிற கவுன் அணிந்து அழகாக உள்ளார்.

English summary
Actress Pooja has got married not to model Deppak Shanmuganathan but to Sri Lankan businessman Prashan David Vithakan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil