»   »  ''டங்காமாரி ஊதாரி, புட்டுக்கினே நீ நாறி''... இது ராஜபக்சேவுக்கான பாட்டு அல்ல!

''டங்காமாரி ஊதாரி, புட்டுக்கினே நீ நாறி''... இது ராஜபக்சேவுக்கான பாட்டு அல்ல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மன்மதராசா, ஒய் திஸ் கொலைவெறி போல் தனுஷின் அடுத்த டூப்பர் ஹிட் பாடலாக உலா வந்து கொண்டிருக்கிறது அனேகன் பட பாடல் ‘டங்காமாரி ஊதாரி, புட்டுக்கினே நீ நாறி'.

முன்பு சேது படம் வந்த புதிதில் சீயான் என்றால் என்ன பொருள் என பட்டிமன்றம் வைக்காத குறையாக மக்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதேபோல், தற்போது டங்காமாரியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


இந்நிலையில், டங்காமாரி பாடலை எழுதிய ரோகேஷ், முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் டங்காமாரி என்றால் என்ன பொருள் என விளக்கம் அளித்துள்ளார்.


அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-


வாலுப் பையன்...

வாலுப் பையன்...

நான் செமத்தியான வாலுப் பையன். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் வியாசர்பாடி. ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன். அப்புறம் ஸ்கூல்ல இருந்து நின்னுட்டேன்.


எக்கச்சக்க வார்த்தைகள் கற்றேன்...

எக்கச்சக்க வார்த்தைகள் கற்றேன்...

அப்போ என் பிரண்ட்ஸ் கூட சுத்துனதுல கிடைச்ச அனுபவத்துல எக்கச்சக்க வார்த்தைகளைக் கத்துக்கிட்டேன். அதை அடிக்கடி பேசும்போது யூஸ் பண்ணுவேன்.


கானா ஆல்பம்...

கானா ஆல்பம்...

வேலைனு ஒண்ணு பார்க்கலைனா மதிக்க மாட்டாங்களே? பிரிண்டிங் பிரஸ்ல வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப என் பிரண்ட் திலீப்னு ஒருத்தன் என்னைத் தேடி வந்தாம். ‘மச்சி கானா ஆல்பம் பண்ணலாம். நச்சுனு கானா பாட்டு ஒண்ணு எழுதிக் குடு'னு கேட்டான்.


எல்லாமே ஹிட்...

எல்லாமே ஹிட்...

எழுத உட்கார்ந்தா வார்த்தைகள் சரமாரியா வந்து விழுந்தது. ஆல்பம் படா பேமஸ். ஆறேழு ஆல்பம் பண்ணினோம். எல்லாமே ஹிட்.


டங்காமாரி...

டங்காமாரி...

நான் போய் நின்னப்ப, கே.வி.ஆனந்த் சார் என்னை நம்மவே இல்லை. ட்யூனுக்கு புதுசா வார்த்தைகள் வேணும்னு கேட்டார். நானும் ‘டங்காமாரி'னு ஆரம்பிச்சு போட்டுத் தாக்கியிருந்தேன்.


ஏமாத்துறவன்...

ஏமாத்துறவன்...

‘டங்காமாரி'ன்னா ஏமாத்துறவன், சொன்னதைச் செய்ய மாட்டான்னு அர்த்தம். ஹாரிஸ் சாருக்கும், ஆனந்த சாருக்கும் வரிகள் பிடிச்சுப் போச்சு.


ரொம்ப ஹேப்பி....

ரொம்ப ஹேப்பி....

‘எங்கே பையன் உருப்படாமப் போயிருவானோ?'னு ரொம்பப் பயந்துட்டு இருந்தாங்க. இப்போ நானும் சினிமாக்காரன் ஆனதுல வீட்டுல எல்லாம் ரொம்ப ஹேப்பி' என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.


ஜிங்கமாரி கேப்மாரி.. ஜெயிச்சுக்கினே நீ மாரி... இது நம்ம பாராட்டு லைன் பாஸ்!English summary
Anegan’s superhit gana song, ‘Danga maari’, was written by an unassuming youngster from Vyasarpadi — Rokesh. He tells how the song has changed his world
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil