twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாரிசு - பொன்னியின் செல்வன் படங்களுக்கு இடையே இப்படி ஒரு ஒற்றுமையா?

    |

    சென்னை : எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் படத்தை இயக்கி உள்ளார் டைரக்டர் மணிரத்னம்.இந்த படம் செப்டம்பர் 30 ம் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    Recommended Video

    PS-1 அடுத்த Song Ready | சினிமா செய்திகள் அப்டேட்.. | Live | Filmibeat Tamil

    லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட 50 புகழ்பெற்ற நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    இவர்கள் 15 பேர் மிக முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. பேஸ்டர்களை தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

    “பாய்காட்டுக்கு பயப்படுற ஆள் நான் இல்லை”: நெட்டிசன்களை ட்ரோல் செய்த விஜய் தேவரகொண்டா“பாய்காட்டுக்கு பயப்படுற ஆள் நான் இல்லை”: நெட்டிசன்களை ட்ரோல் செய்த விஜய் தேவரகொண்டா

    சோழா சோழா பாடல் ரிலீஸ்

    சோழா சோழா பாடல் ரிலீஸ்

    ஃபர்ஸ்ட் சிங்கிளாக வந்தியத் தேவன் ரோலில் நடித்துள்ள கார்த்தியின் என்ட்ரி சாங்கான பொன்னி நதி பாடல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த விழாவில் பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிளாக சோழா சோழா பாடல் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடித்துள்ள விக்ரமிற்காக உருவாக்கப்பட்டது.

    வந்தியதேவனை மிஞ்சிய ஆதித்ய கரிகாலன்

    வந்தியதேவனை மிஞ்சிய ஆதித்ய கரிகாலன்

    ஜுலை 31 ம் தேதி வெளியிடப்பட்ட பொன்னி நதி பாடல் யூட்யூப்பில் இதுவரை 15 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.பொன்னியின் செல்வன் டிரைலர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

    வாரிசு டீமும் இணைந்து விட்டதா?

    வாரிசு டீமும் இணைந்து விட்டதா?

    இந்த சமயத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு, பொன்னியின் செல்வன் படத்தின் தெலுங்கு வெர்சனுக்கான தியேட்டர் உரிமத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீசிடம் இருந்து தான் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.தில் ராஜு, ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தான் பொன்னியின் செல்வன் தெலுங்கு வெர்சன் வெளியாக உள்ளது.

    எதிர்பார்ப்பை தூண்டுறாங்களே

    எதிர்பார்ப்பை தூண்டுறாங்களே

    ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு ஏற்கனவே விஜய் நடிக்கும் வாரிசு, டைரக்டர் ஷங்கர் ராம்சரண் வைத்து இயக்கி வரும் ஆர்சி 15 ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இவை இரண்டுமே ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும், பெரிய பட்ஜெட் படங்கள் ஆகும்.வாரிசு தயாரிப்பாளர் பொன்னியின் செல்வன் டீமில் இணைந்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை தந்துள்ளது.

    English summary
    It is now revealed that top Tollywood producer Dil Raju after the event has acquired the theatrical rights of the Telugu version of 'Ponniyin Selvan' from Lyca Productions and Madras Talkies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X