திருநங்கை என நிரூபிக்க சொல்லி இயக்குனர் செய்த காரியம்- வீடியோ
ஹைதராபாத்: தான் ஒரு திருநங்கை என்பதை நிரூபிக்க இயக்குனர் ஒருவர் செய்த காரியத்தை கூறி நடிகை சோனா ரத்தோட் கண்ணீர் சிந்தியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து ஸ்ரீ ரெட்டி குரல் கொடுத்தார். இதையடுத்து ஒவ்வொரு நடிகையாக முன்வந்து பேசத் துவங்கியுள்ளனர்.
ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகைகள், பெண் ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓ.க்கள் கலந்து கொண்டனர்.
கொடுமை
ஹைதராபாத் நிகழ்ச்சியில் ஸ்ரீ ரெட்டியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்த நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து தெரிவித்து கண்ணீர் சிந்தினார்கள்.
திருநங்கை
பட வாய்ப்பு குறித்த விளம்பரத்தை டிவியில் பார்த்துவிட்டு ஆடிஷனுக்கு சென்றேன். நான் நிஜமாகவே திருநங்கை தானா என்று இயக்குனர் கேட்டார். அதை நிரூபிக்க என்னை ஆடையை அவிழ்த்து காண்பிக்க வைத்தார் என்று கூறி நடிகை சோனா ரத்தோட் கதறி அழுதார்.
ஜூனியர் ஆர்டிஸ்ட்
படங்களில் வாய்ப்பு அளிப்பதாகக் கூறி எங்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்கள் அதன் பிறகு நாங்கள் கருப்பாக, குண்டாக இருப்பதாகக் கூறி நிராகரித்துவிட்டனர் என்கிறார் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஸ்ருதி.
கழிப்பிடம்
நம் தலைவர்கள் சுத்தமான இந்தியா பற்றி பேசுகிறார்கள். ஆனால் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது கழிப்பிட வசதி இல்லாமல் பொதுவெளியில் செல்ல வேண்டி உள்ளது என்கிறார் ஸ்ருதி.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.