அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் சீரியல் நடிகர் அர்ணவ்… திவ்யாவை தொடர்ந்து திருநங்கையும் புகார்
சென்னை: சின்ன திரை நட்சத்திரங்கள் அர்ணவ், திவ்யா காதல் பஞ்சாயத்து கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. .
திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இப்போது காவல்நிலையம், நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்நிலையில், திவ்யாவை தொடர்ந்து மலேசியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் அர்ணவ் குறித்து திடுக்கிடும் பல தகவல்களை கொடுத்துள்ளார்.

அர்ணவ் – திவ்யா ஜோடி
சீரியல் நடிகர் அர்ணவ், நடிகை திவ்யா இருவரது காதல் விவகாரமும் கடந்த ஒருவாரமாக ட்ரெண்டிங்கில் உள்ளது. செவ்வந்தி சீரியலில் அறிமுகமான திவ்யா, தற்போது மகராசி நாடகத்திலும் நடித்து வருகிறார். அவரும் விஜய் டிவியின் செல்லம்மா தொடரில் நடித்துவரும் அர்ணவும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு ஒரேவீட்டில் ஒன்றாக வாழ்ந்துவந்த இருவரும், சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அர்ணவ் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில், தற்போது கர்ப்பிணியாக இருக்கும் திவ்யா சில தினங்களுக்கு முன்பு அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறியிருந்தார். மேலும் தனது கரு கலைந்துவிட வாய்ப்பு இருப்பதாகக் கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அர்ணவ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து திவ்யா வெளியிட்ட வீடியோக்கள் வைரலாகின. உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்த அர்ணவ் நடிகை திவ்யா மீது புகார் அளித்தார்.

சிறையில் அர்ணவ்
இந்நிலையில், திவ்யாவின் புகாரின்பேரில் சென்னை போரூர் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அர்ணவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், படப்பிடிப்பில் இருந்த அர்ணவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீஸார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அர்ணவ்வை வரும் 28ம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதியும் உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்ணவ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருநங்கை புகார்
இந்நிலையில், அர்ணவ் மீது மலேசியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் சரமாரியாக புகார் அளித்துள்ளார். திவ்யாவின் வழக்கறிஞரை செல்போனில் தொடர்புகொண்ட அந்த திருநங்கை, அர்னவ் தன்னை ஏமாற்றியதாகக் கூறியுள்ளார். அர்ணவ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடன் நெருங்கி பழகி வந்ததாகவும், அப்போது மாலில் வைத்து தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அர்ணவிற்கு அப்போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். திவ்யாவின் வழக்கறிஞரிடம் அர்ணவ் பேசிய ஆடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அடுத்தது என்ன?
இதனிடையே, அர்ணவ் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வேன். என திவ்யா நேற்று பேட்டியளித்திருந்தார். அர்ணவின் பெற்றோர் வந்து இதை சொல்ல வேண்டும். எனவும், பெற்றோர் பெயரை சொல்லி தான் அர்ணவ் என்னை தவிர்த்தார் என்றும் அவர் கூறியிருந்தார். சமாதானமாக போக திவ்யா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், மலேசியாவைச் சேர்ந்த திருநங்கையும் அர்ணவ் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











